மேலும் அறிய

Amma Unavagam: புதுப்பொலிவு பெறும் சென்னை அம்மா உணவகங்கள்.. புதிய உணவுகளும் விரைவில் அறிமுகம்!

கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது “அம்மா உணவகம்”.

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது. அப்போது 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது “அம்மா உணவகம்”. மலிவு விலையில் 3 நேர உணவுகள் கிடைத்ததால் ஏழை, எளிய மக்கள், ஊரை விட்டு வந்து வேலை தேடுபவர்கள், வெளியூரில் தங்கியிருப்பவகள் என அனைவருக்கும் அம்மா உணவகங்கள் வரப்பிரசாதமாக அமைந்தது. இங்கு காலையில் ரூ.1க்கு இட்லி, மதியம் சாம்பார், தயிர், கிரை, எலுமிச்சை, கருவேப்பிலை சாத வகைகள், இரவில் சப்பாத்தி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியிலும், கொரோனா, புயல், வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது. இதனிடையே 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதியில் கலைஞர் உணவகம் பற்றிய அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. 

இதனால் ஏற்கனவே செயல்பட்டு வந்த அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படியான நிலையில் சென்னையில் செயல்படும் அம்மா உணவகங்களை தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

சேதமடைந்த உணவக கட்டங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவாக்குவதுடன் மட்டுமல்லாமல் அம்மா உணவகத்தில் இருக்கும் பிரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி மற்றும் சமையலறை பொருட்களை மாற்றவும் மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களை அதிகளவில் வரவழைக்க அம்மா உணவகத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உணவகங்கள் பற்றி புகார் வந்து, அவப்பெயர் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களில் மலிவு விலைக்கு உணவுகள் வழங்கப்படுவதால் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.140 கோடி செலவு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kallakurichi Liquor Death: அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
Kallakurichi Liquor Death:”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" : அண்ணாமலை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

MK Stalin on Kallasarayam  : ”விஷச்சாராயம் எப்படி வந்துச்சி..களத்துக்கு போ உதய்” ஆணையிட்ட ஸ்டாலின்Vijay Vs DMK | ”திமுக அரசின் அலட்சியம்”பொங்கி எழுந்த விஜய்!கள்ளச்சாரய விவகாரம்Kallakurichi Kalla Sarayam | DGP-யை அழைத்த ஸ்டாலின் SP-க்களுக்கு பறந்த ORDER!Trichy Surya | தமிழிசையை சீண்டிய திருச்சி சூர்யா? தூக்கி வீசிய பாஜக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kallakurichi Liquor Death: அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
அரசுக்கு எதிராக குரல்.. ஆறுதல் தெரிவிக்க கள்ளக்குறிச்சி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்..!
Kallakurichi Liquor Death:”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
”தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம்” கள்ளச்சாராய உயிரிழப்பால் ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்!
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 42-ஆக உயர்வு
"1000 டாஸ்மாக் கடைகளை நாளையே மூட வேண்டும்" : அண்ணாமலை
Kallakurichi Illicit Liquor: கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? -  சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் பார்வை பறிபோனதா? - சேலம் அரசு மருத்துவமனை விளக்கம்
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக உயர்வு
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kallakurichi Liquor Death: கள்ளச்சாராய மரணங்கள் : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கியஅமைச்சர் உதயநிதி
Kamal Haasan:
Kamal Haasan: "போதைக்கு எதிரான போரில் ஈடுபட வேண்டிய தருணம்" கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கமல் இரங்கல்
Embed widget