பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுடையவர்களுக்கு தடுப்பூசி உதவி எண்! - சென்னை மாநகராட்சி
சைகை மொழியில் விளக்குவதற்கான உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி பேச்சு மற்றும் செவித்திறனில் குறைபாடுடையவர்கள் தடுப்பூசிக்கான கோரிக்கைகளுக்காக ’9700799993’ என்கிற எண்ணை அணுகலாம்.
புதிதாகப் பொறுப்பேற்ற தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அவர்களது நலன் கருதி நேரடியாக அவர்கள் வீட்டிற்கே சென்று தகுந்த பாதுகாப்புடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காகத் தமிழ்நாடு அரசு டோல் ஃப்ரீ சிறப்பு உதவி எண் 18004250111 ஒன்றையும் நிறுவியுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள செவித்திறன் மற்றும் பேச்சுத்திறனில் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் அவர்கள் சைகை மொழியில் விளக்குவதற்கான உதவி எண்ணை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன்படி பேச்சு மற்றும் செவித்திறனில் குறைபாடுடையவர்கள் தடுப்பூசிக்கான கோரிக்கைகளுக்காக ’9700799993’ என்கிற எண்ணை அணுகலாம்.
பெருநகர சென்னை மாநகராட்சி, மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று தகுந்த பாதுகாப்புடன் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகளின் உதவி எண் : 18004250111பேச்சு மற்றும் செவி
— Greater Chennai Corporation (@chennaicorp) May 25, 2021
திறனற்றவர்களின் உதவி எண் : 9700799993@GSBediIAS pic.twitter.com/KySA1gCq7s