மேலும் அறிய

10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட்டுகள்.. உலக சாதனை படைத்த சென்னைஸ் அமிர்தா!

10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மாணவர்கள் Einstein உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் 10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து Einstein உலக சாதனை நிகழ்ச்சியை செங்கல்பட்டில் படைத்தனர்.

இந்த உலக சாதனையில் 500க்கும் மேற்பட்ட சமையல் கலை மாணவர்கள், அவர்களின் அசத்தலான திறன், கூட்டு முயற்சியில் மற்றும் நேரத்துக்குள் செயலாற்றும் திறன் ஆகிய தகுதிகளை வெளிப்படுத்தினர்.

மாணவர்களுக்கு செஃப் ராஜ்குமார் மற்றும் குழு அளித்த பயிற்சியும் வழிகாட்டுதலும் மூலம் 10 நிமிடங்களில் 1000 ஆம்லெட்டிகள் என்று நிர்ணயித்த இலக்கை 8 நிமிடம் 24 வினாடிகளில் 1200 வகையான ஆம்லெட்டுகளை தயாரித்து Einstein உலக சாதனை படைத்தனர்.

"10 நிமிடங்களில் 1000 வகையான ஆம்லெட்டுகள்"

இந்த நிகழ்வு, ஊடகங்கள் மற்றும் சமையல் ஆர்வலர்களுக்கு மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்றது. இது, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரியின் ஒரு முக்கியமான சாதனையாகும்.

இந்த சாதனை, உலகளாவிய சமையல் கலை துறையில் புதிய சாதனைகளை எட்டும் வகையில் கல்லூரியின் இடத்தை உறுதி செய்தது. இந்த முக்கியமான நிகழ்வில் திரு. எஸ். அருண்ராஜ் I.A.S, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் முதன்மை விருந்தினராக கலந்துக்கொண்டு, மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்லூரியின் உலகளாவிய சமையல் திறனை மேம்படுத்தும் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

குறிப்பாக தமிழ்நாட்டின், சென்னைஸ் அமிர்தாவில் சமையல் கலை பயின்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் அவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என பெருமைப்படும் அளவிற்கு சென்னைஸ் அமிர்தா மாநிலத்திற்கும், நாட்டிற்கும் சேவை செய்து வருகிறது என்று கூறினார்.

உலக சாதனை படைத்த சென்னைஸ் அமிர்தா:

மேலும்,  இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த செஃப் ராஜ்குமார் மற்றும் அனைவரையும் பாராட்டிய அவர், இந்த உலக சாதனை நிகழ்ச்சியை செங்கல்பட்டில் நடத்தியது பெருமையான விஷயம் என்றும், இதுபோல பல சாதனைகளை சென்னைஸ் அமிர்தாபடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி அளித்ததாகவும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு படிக்கின்றனர் என்பதும் நமக்கு பெருமையான விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு ஆர். பூமிநாதன், CAGI (சென்னைஸ் அமிர்தா குரூப் ஆஃப் இன்ஸ்டிட்யூஷன்ஸ்) CHAIRMAN முன்னிலையில் நடைபெற்றது.

அவர் உலக சாதனை படைத்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார் . மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார். இந்த நிகழ்வில் லியோபிரசாத், CAGI-இன் CAD மற்றும் இக்கல்லூரின் முதல்வர் ஸ்வாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Einstein உலக சாதனைக்கான சான்றிதழை அதன் நிறுவனர் கார்த்திக்குமார் அவர்கள், சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவர் பூமிநாதனிடம் வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MPSupriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget