மேலும் அறிய

Oxygen Supply: ஆக்சிஜன் வழங்கக் கோரி செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஆக்சிஜன் வழங்கக் கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக் குறையை தீர்த்து நோயாளிகளுக்கு தேவையான  ஆக்சிஜன் வசதியை மேம்படுத்திட வேண்டும் என்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் எண்ணிக்கை உயர்த்திட வேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Oxygen Supply: ஆக்சிஜன் வழங்கக் கோரி செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து 13 நபர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்நிலையில்,  ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதால் முறையாக எங்களால் நோயாளிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தர முடியவில்லை அதனால் உடனடியாக ஆக்சிஜன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கும் இந்த நிலையில் வேறு மாவட்டத்திற்கு மருத்துவர்களை மாற்றுவது மிகவும் அபாயகரமானது என்று கூறி முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் ஏராளமான இளம் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, டெக்னிக்கல் பிரச்சனையால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், டெக்னிக்கல் பிரச்சனை என்ன என்பது  குறித்து விசாரணை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

11 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நேற்று இரவு 11 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கொரோனா நோயாளிகள் அல்ல என்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையே மரணங்களுக்குக் காரணமென்றும் கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்@RAKRI1
— Dr Ravikumar M P (@WriterRavikumar) May 5, 2021

மேலும், இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் விசிக எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்பு ஏன் நடந்தது என்கிற சர்சையே இன்னும் நிறைவு பெறாத நிலையில் சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவர்களே, பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, மருத்துவமனையின் அவல நிலையை தெளிவாக காட்டுகிறது. மருத்துவர் பற்றாக்குறை, உபகரணங்கள் பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை என ஒட்டுமொத்த பற்றாக்குறையில் ஒரு பெரிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வந்துள்ளது.

Oxygen Supply: ஆக்சிஜன் வழங்கக் கோரி செங்கல்பட்டு மருத்துவர்கள் போராட்டம்

இதற்கு முன்பும் இங்கு ஓரிரண்டு என உயிரிழப்புகள் நடந்துள்ளது. ஆனால் அவையெல்லாம் வழக்கமான சிகிச்சை பலனின்றி போனதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் என்று தான் அனைவரும் நினைத்து வந்துள்ளனர். ஆனால் இப்போது தான் அங்கு ஏதோ ஒரு பிரச்னை இருப்பது வெளிச்சத்திற்கு வருகிறது. 13 பேர் தங்கள் உயிரை மாய்த்து இந்த தகவலை தமிழகத்திற்கு சொல்லி சென்றுள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறு தான் பிரச்னை என நிர்வாகம் தெரிவிக்கிறது. மருத்துவர்களே பற்றாக்குறையாக தான் இருக்கிறார்கள் என அங்குள்ள மருத்துவர்களே கூறுகிறார்கள். அப்படியென்றால் எது தான் உண்மை?  காலையில் துவங்கிய செங்கல்பட்டு குழப்பம் இன்னும் தெளிவு பெறாமல் தொடர்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget