Central Chennai Election Results 2024: மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றி!
Central Chennai Lok Sabha Election Results 2024: மத்திய சென்னை தொகுதியில் பாஜக, தேமுதிக, திமுக, நாம் தமிழர் இடையே நீடிக்கும் போட்டியில் வெற்றி யாருக்கு என்பது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தரப்பில் தயாநிதி மாறன் 4,13,848 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களும், வேட்பாளர்களும்:
மத்திய சென்னை மக்களவை தொகுதியில், 13,50,161 மொத்தமாக வாக்காளர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதில், 6,67,465 ஆண் வாக்காளர்களும், 6,82,241 பெண் வாக்காளர்களும், 455 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். மத்திய சென்னை மக்களவைத் தொகுதி நெடுங்காலமாகவே திமுகவின் கோட்டையாகவே உள்ளது. இதுவரை அங்கு நடைபெற்ற 12 தேர்தல்களில், 8 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் தலா 3 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய சென்னை தொகுதியில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு மற்றும் அண்ணா நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். மத்திய சென்னை தொகுதியில், திமுக தரப்பில் தயாநிதி மாறன், பாஜக தரப்பில் வினோஜ் செல்வம், தேமுதிக தரப்பில் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சி தரப்பில் கார்த்திகேயன் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.
பதிவான வாக்குகள்:
நடைபெற்று முடிந்த தேர்தலில், 7,28,614 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதில் 3,70,660 ஆண் வாக்காளர்களும், 3,57,819 பெண் வாக்காளர்கள், 135 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமாக 53.96 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில் தென் சென்னை தொகுதியில் 58.98 சதவீதம் வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.மேலும், இந்த தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முரசொலி மாறன் மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர், மத்திய அமைச்சராக பதவி வகித்துள்ளதால், இது மத்திய அமைச்சரை உருவாக்கும் விஐபி தொகுதி எனவும் வர்ணிக்கப்படுகிறது.
மத்திய சென்னை தொகுதியில் நிலவும் பிரச்சனைகளும் மக்களின் கோரிக்கையும்:
மத்திய சென்னை தொகுதியில் முக்கிய பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் தான். அலுவலக நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவும். ரயில் நிலையங்களில் குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பதும் பெருங்குறையாக உள்ளது. போதிய எண்ணிக்கையில் சுரங்கப் பாதை, நடைமேம்பாலங்கள் இல்லாததால் ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் இணைக்கும் திட்டம் நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.