மேலும் அறிய

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டது.

கரூர் தவிட்டுப்பாளையம் பகுதியில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆற்றில் இறங்கி போராட்டம் செய்தனர். தற்காலிகமாக இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நிறுத்தி வைக்க உத்தரவிட்டார்.

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ஜல் ஜீவன் மத்திய அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 3 நகராட்சிகள் 7 பேரூராட்சிகள் மற்றும் 3728 கிராமங்கள் குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டம் ரூபாய் 4187.84 கோடி மதிப்பீடு திட்டத்தின் கீழ் கடந்த 14.12.2022 ஆம் தேதி அன்று ஒப்புதல் வழங்கப்பட்டு, தற்பொழுது கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

இந்தப் பணிகள் நடைபெறுவதால் வேலாயுதம்பாளையம், புஞ்சை புகலூர்,காகிதபுரம், திருக்காடுதுறை, பாலதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வசிக்கும் கிராமத்திற்கு குடிநீர் பிரச்சனை ஏற்படுவது காரணமாக இந்த ஜல்ஜீவன் திட்டத்தை எங்கள் பகுதியில் தடை செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே காகிதபுரத்தில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காயித ஆலை நிறுவனத்தால் ஏற்கனவே மூன்று பிளான்ட்கள் அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஜல்ஜீவன் கூட்டுக் குடிநீர் திட்டமும் அமைக்கப்பட்டால் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும்.

காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம் - கரூரில் ஜல்ஜீவன் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தவிட்டுப்பாளையத்தைச் சார்ந்த 12 சமூக ஆர்வலர்கள் இதுதொடர்பாக எந்த பிரச்சனையும் எழுப்பக் கூடாது. எனவும் எதிர்காலத்தில் பொது அமைதியை சீர்குளிக்கும் செயலை செய்யக்கூடாது என்பதற்காக 12 நபர்களுக்கும் ஒரு வருட காலத்திற்கு அமைதி காப்பீர் என்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் அபதாரம் விதிக்கப்படும். ஒரு வருடத்திற்கு சிறையில் வைக்க நேரிடும் என வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வருவாய் வட்டாட்சியர் புகலூர் அலுவலகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த 12 நபர்களுக்கும் இதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஜல்ஜீவன் திட்டம் பணிகள் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் நாளை காலை மாவட்ட ஆட்சியர் நேரில் பொதுமக்களை சந்தித்து இது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது மேலும் பாதுகாப்பு பணிக்காக வேலாயும்பாளையம் போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget