மேலும் அறிய

மேகதாது விவகாரத்தில் ஒருசார்பு முடிவு ஆபத்து: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்.

சென்னை: மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து என்றும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

தமிழ்நாடு மற்றும் புதுவைக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆம் கூட்டம் தில்லியில் நாளை மறுநாள் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

 

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவது குறித்து மட்டும் விவாதிக்கப்பட்டால் அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு குறுக்கு வழியிலாவது அனுமதி பெற்றுவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, இப்போதுள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

 

மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டால், தமிழ்நாட்டின் சார்பில் எத்தகைய நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் பங்கேற்கும் நீர்வளத்துறை செயலாளருக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், இப்போதுள்ள அரசால் எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்க முடியாது. இத்தகைய சூழலில் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகள் தவறான நிலைப்பாட்டை எடுத்தால் அது தமிழ்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையின் அடிப்படையில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிப்பது குறித்து பரிந்துரைக்கும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள ஆணையம் 2019-ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டது. எனினும், அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, விரிவான திட்ட அறிக்கை குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால், விரிவான திட்ட அறிக்கை பற்றி நீண்ட காலமாக விவாதிக்கப்படாமல் இருந்த நிலையில், அது குறித்து மத்திய நீர்வள ஆணையமே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறிய மேலாண்மை ஆணையம், அந்த அறிக்கையையும் திருப்பி அனுப்பிவிட்டது.

 

இத்தகைய சூழலில் தான் மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை குறித்து, மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திமுக அரசு திறம்பட நடத்தாததால்,மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடையில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. அதனால், நாளை மறுநாள் நடைபெறவுள்ளக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து கர்நாடக அரசு சிக்கல் எழுப்பும் வாய்ப்புள்ளது.

 

எனவே, மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக முடிவெடுக்கப்படுவதைத் தவிர்க்க நாளை மறுநாள் தில்லியில் நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் புதிய அரசுகள் பங்கேற்கும் வரை ஒத்திவைக்க வேண்டும்; ஒருவேளை கூட்டத்தை நடத்துவது தவிர்க்க முடியாதது என்றால், அதில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்கப்படாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் முன்கூட்டியே உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
ஒரே நாளில் தீக்கிரையான 6.5 டன் கஞ்சா! செங்கல்பட்டில் பரபரப்பு... நேரலையில் கவனித்த முதலமைச்சர்!
ஒரே நாளில் தீக்கிரையான 6.5 டன் கஞ்சா! செங்கல்பட்டில் பரபரப்பு... நேரலையில் கவனித்த முதலமைச்சர்!
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
ஜெர்மனியில் வேலை, லட்சத்தில் சம்பளம்.. எனக் கூறி ரூ.61 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல் !
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - அதிகாரிகளின் விளக்கம் என்ன?
பொத்தேரி அருகே அதிர்ச்சி! அரசு நிலத்தில் பல கோடி ரூபாய் மரம் கடத்தல் புகாரா? - விளக்கம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
Embed widget