Kilambakkam Bus Terminal: சென்னையில் பேருந்துகள் இனி இப்படி தான் இயங்கும்! கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தால் வந்த மாற்றம்
Kilambakkam Bus Terminal: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்படுவதை தொடர்ந்து சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Kilambakkam Bus Terminal: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்படுவதை தொடர்ந்து, இனி பேருந்துகள் எந்த பகுதிக்கு எந்த நேரத்தில் இயக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்:
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை ஓட்டம் கடந்த 12ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதனை திறந்து வைக்க உள்ளார். இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் லிப்ட், கழிவறை, எலிவேட்டர்கள், பால் கொடுக்கும் அறை உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இங்கிருந்து எந்த நேரத்தில் எந்த பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து சேவை:
SETC, TNSTC, PRTC மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேடுவில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட உள்ளது. SETC மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆம்னிபஸ்களின் செயல்பாடுகள் உடனடி நடைமுறையுடன் தொடங்கும், அதே நேரத்தில் TNSTC மற்றும் PRTC ஆகியவை பற்றி பின்னர் தெரிவிக்கப்படும். சென்னையில் உள்ள பல்வேறு நிறுத்தங்களில் இருந்து முனையத்திற்கும், அதற்கு நேர்மாறாக பெரும் போக்குவரத்து நேரத்தின் போது பயணிகளின் பயணத்தை எளிதாக்க, பின்வரும் அட்டவணையின்படி MTC-ஆல் சீரான இடைவெளியில் ஷட்டில் (shuttle) சேவைகள் இயக்கப்படும்.
— CMDA Chennai (@CMDA_Official) December 30, 2023
சராசரி பேருந்து இடைவெளிகள் முக்கிய வழிகள்:
வழிகள் | 70V, 70C, 104CCT | 55V, M18 | 18ACT |
நேரம் | கோயம்பேடு | தாம்பரம் | கிண்டி |
காலை 04.00 - காலை 10.00 | 5 நிமிடம் | 3 நிமிடம் | 3 நிமிடம் |
காலை 10.00 - மாலை 04.00 | 15 நிமிடம் | 5 நிமிடம் | 10 நிமிடம் |
மாலை 04.00 - இரவு 10.00 | 5 நிமிடம் | 2 நிமிடம் | 3 நிமிடம் |
இரவு 10.00 - காலை 04.00 | 15 நிமிடம் | 8 நிமிடம் | 15 நிமிடம் |
SETC, TNSTC, PRTC, மற்றும் தனியார் பேருந்துகள் (ஆம்னி) ஆகியவற்றின் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக, கோயம்பேட்டில் உள்ள சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்தில் உள்ள புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு பேருந்துச் செயல்பாடுகள் மாற்றப்பட… pic.twitter.com/dDSu0V503Y
— CMDA Chennai (@CMDA_Official) December 30, 2023
சராசரி பேருந்து இடைவெளிகள் - பிற வழிகள்:
வழிகள் | இலக்கு | சராசரி இடைவெளி |
18A, 21G | பிராட்வே | 10 நிமிடம் |
91,95,91K, 95K | திருவான்மியூர் | 8 நிமிடம் |
51A, 51AX, V51X | தி.நகர் | 10 நிமிடம் |
66P | பூந்தமல்லி | 10 நிமிடம் |
166X | ஐயப்பன்தாங்கல் | 8 நிமிடம் |