Breaking News LIVE: சொத்து வரிகள் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு..
Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
LIVE
Background
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 9வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 107.45க்கு விற்கப்படுகிறது. சென்னையில் டீசல் விலை ரூபாய் 97.52க்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் கணித்திருந்தனர். பெட்ரோல், டீசல் விலையை நான்கு மாதங்களுக்கும் மேலாக சீராக வைத்திருந்து நஷ்டத்தை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகி வருவதால், இந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தனர்.
சொத்து வரிகள் உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு..
சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில், 25% முதல் 150% வரை சொத்துவரி உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சிபிஎம் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு
சிபிஎம் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் மீண்டும் தேர்வு
“ஆளுநருக்கு கால நிர்ணயம் தேவை” : தனிநபர் மசோதா தாக்கல்செய்த வில்சன் எம்.பி.,
“ஆளுநருக்கு கால நிர்ணயம் தேவை” : தனிநபர் மசோதா தாக்கல்செய்த வில்சன் எம்.பி.,
உகாதி புத்தாண்டு - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
உகாதி புத்தாண்டு - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன் உகாதி
புத்தாண்டுத் திருநாளைச் (2.04.2022) சிறப்புடன் கொண்டாடும்
தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது
நெஞ்சார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
கல்யாணராமன் மீதான குண்டாஸ் ரத்து
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் மீதான குண்டாஸை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்