மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பாதியில் வெளியேறிய மக்களை மிரட்டிய பவுன்சர்கள்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற விழாவில் பாதியில் வெளியேறிய மக்களை மிரட்டிய பவுன்சர்கள்
![மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பாதியில் வெளியேறிய மக்களை மிரட்டிய பவுன்சர்கள் Bouncers intimidated people who left halfway through the function attended by Union Finance Minister Nirmala Sitharaman puducherry மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் பாதியில் வெளியேறிய மக்களை மிரட்டிய பவுன்சர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/08/8be203e19323e8909a99ff00d577df561688831824649113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்ற விழாவில் இருந்து பொதுமக்கள் பலர் பாதியில் வெளியேறியதால், விழா ஏற்பாட்டாளர்கள் பவுன்சர்களை வைத்து கதவை பூட்டி பொதுமக்களை அடைத்து வைத்து விழாவைவிட்டு வெளியாறக்கூடாது என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் வங்கிகள் மூலம் பல்வேறு திட்டங்களுக்கு 1.42 லட்சம் பேருக்கு 2,628 கோடி ரூபாய்க்கான கடனுதவிகளை வழங்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனிடையே மத்திய அமைச்சரின் விழாவிற்கு கூட்டத்தை சேர்ப்பதற்காக அதிகாரிகள் இன்று புதுச்சேரி முழுவதும் கிராமப்புறங்களில் நூறு நாள் வேலை திட்ட பணிகளை ரத்து செய்துவிட்டு, அதில் பணி செய்பவர்களை 300 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் விழா நடைபெறும் மைதானத்திற்கு அழைத்து வந்தனர். விழா நடைபெறுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே விழா பந்தலில் பொதுமக்கள் அமர வைக்கப்பட்டனர். மேலும் விழாவிற்கு வந்தவர்கள் கலைந்து செல்லக்கூடாது என்பதற்காக பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனிடையே குறிப்பிட்ட நேரத்தில் விழா தொடங்காததால், பொறுமையிழத்த வயதானவர்கள் மற்றும் கை குழந்தைகளுடன் விழாவிற்கு வந்த பெண்கள் என பெரும்பானோர் விழா மேடையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டம் கூட்டமாக விழா மேடையில் இருந்து வெளியேறினர்.
அப்போது பவுன்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்களை வெளியே செல்ல விடாமல் கதவை இழுத்து மூடினர். இதனால் விழாவிற்கு வந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் சிலர் மயக்கமடைந்து கீழே விழும் நிலையும் ஏற்பட்டது. இதேபோல் ஏற்கனவே வங்கிகளால் கடனுதவி பெற்ற பயனாளிகளை கணக்கு காட்டுவதற்காக மீண்டும் இந்த விழாவிற்கு அதிகாரிகள் அழைத்து வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)