மேலும் அறிய

Special Train: ராமேஸ்வரம்- சென்னை பீச் - பனாரஸ் இடையே சிறப்பு ரயில்.! பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு

Special Train: ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை பீச் வழியாக பனாரஸ்க்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் கூட்ட நெரிசல்

ரயிலில் பயணம் செய்யவே மக்கள் அதிகளவில் விருப்பப்படுவார்கள். குறிப்பாக பாதுகாப்பு வசதியோடு, அடிப்படை வசதிகளும் இருப்பது முக்கிய காரணமாகும். எனவே நாடு முழுவதும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டாலும் மக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. அந்த வகையில் கூட்ட நெரிசலை குறைக்க அவ்வப்போது சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் படி ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை பீச் வழியாக பனாரஸ்க்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

ராமேஸ்வரம் டூ சென்னை பீச் சிறப்பு ரயில்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகளின் அதிக நெரிசலை குறைக்கும் வகையில்,  ராமேஸ்வரம் – பனாரஸ் – சென்னை பீச் இடையே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி, (ரயில் எண் 06099) ராமேஸ்வரம் – பனாரஸ் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி இரவு 23.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு, 4 நாள் பயணமாக  ஜனவரி 2-ம் தேதி மதியம் 12.00 மணிக்கு பனாரஸை சென்றடையவுள்ளது. 

ராமேஸ்வரம்- பனாரஸ் சிறப்பு ரயில்

அதேபோல், (ரயில் எண் 06100) பனாரஸ் – சென்னை பீச் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் 2026 ஜனவரி 2ஆம் தேதி இரவு 23.00 மணிக்கு பனாரஸில் இருந்து புறப்பட்டு, 3 நாள் பயணமாக  ஜனவரி 5ஆம் தேதி இரவு 22.00 மணிக்கு சென்னை பீச் ரயில் நிலையத்தை அடையும். இச்சிறப்பு ரயிலில் மொத்தம் 16 ஏசி மூன்றாம் வகுப்பு படுக்கை பெட்டியும்,  2 லக்கேஜ் பெட்டிகளும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 பெட்டிகள் ஐஆர்சிடிசி மற்றும் காசி தமிழ் சங்கமம் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

மேலும் இந்த சிறப்பு ரயில்  திருச்சி, புடுக்கோட்டை, விஜயவாடா, நாக்பூர், ஜபல்பூர், பிரயாக்ராஜ் செஹோகி உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நிற்கும். இச்சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு டிசம்பர் 27 ஆம் தேதி மதியம் 12.00 மணி முதல் துவங்கப்பட்டுள்ளது என்று தென் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
மதுரையில் குப்பையில் தொலைந்த 3 சவரன் தங்கம்.. நேர்மையால் அதை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர் சுப்பம்மா!
TVK Vijay: திடீரென டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்.. மிரண்ட தொண்டர்கள்.. பரபரப்பு புகார்!
TVK Vijay: திடீரென டிஜிபி அலுவலகம் சென்ற விஜய்.. மிரண்ட தொண்டர்கள்.. பரபரப்பு புகார்!
TVK Vijay: ஆதாய‌ சூதாடி நீயா? நானா?.. விஜயை தரக்குறைவாக தாக்கிய பொன்ராஜ்.. உச்சக்கட்ட மோதல்!
TVK Vijay: ஆதாய‌ சூதாடி நீயா? நானா?.. விஜயை தரக்குறைவாக தாக்கிய பொன்ராஜ்.. உச்சக்கட்ட மோதல்!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
மதுரை ரயில்வே சாதனை: 3.5 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்து இலக்கை முறியடித்தது.. ஆச்சரியம் காத்திருக்கிறது!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget