மேலும் அறிய

திடீரென நீல நிறத்தில் ஜொலித்த கடல்... பார்த்து ரசித்த பொதுமக்கள்! காரணம் என்ன?

மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை பதியில் இரவு நேரத்தில் கடல் அலைகள்  நீல நிறத்தில் ஜொலித்ததால் பொதுமக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

விழுப்புரம் ; மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை பதியில் இரவு நேரத்தில் கடல் அலைகள்  நீல நிறத்தில் ஜொலித்ததால் கடலுக்கு சென்றவர்கள் அடர் நீல நிற கடல் அலையை கண்டு ஆச்சரியபட்டனர்.

நீல நிறத்தில் ஜொலித்த கடல்

எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடித்த ‘என் அண்ணன்’ திரைப்படத்தில், ‘நீல நிறம்.. வானுக்கும், கடலுக்கும் நீலநிறம்..’ என்ற பாடல் வரிகள் காதலியை வர்ணிப்பது போல் இடம் பெற்றிருக்கும். எல்லோரும் வானம் நீல நிறத்தில் இருப்பதை தினமும் பார்க்கிறோம். ஆனால் கடல் நீர் நீல நிறத்தில் இருப்பதை யாரும் பார்த்திருக்க முடியாது. உயரமான இடத்தில் இருந்து கழுகுப் பார்வையில் ஆழ்கடலை பார்க்கும்போது, அது நீல நிறத்தில் இருப்பது தெரியும். ஆனால், கரையோரம் அலையாக வரும் கடல் நீரை உற்றுநோக்கினால், அது எந்த நிறத்திலும் தெரியாது.

ஆனால், நேற்று இரவு சென்னை திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம்  உள்ளிட்ட பகுதிகளில் கடற் கரையோரம் சீறி எழுந்த அலைகள் நீல நிறத்தில் ஜொலிப்பதை அங்கிருந்தவர்கள் பார்த்து ரசித்தனர். ஆர்வம் மிகுதியால் சிலர், அதை தங்களது செல்போன் கேமராவில், வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்து, வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடற்கரையில் இரவு நேரத்தில் ஒளிரும் ஃப்ளோரசன்ட் அலைகள் எழுவது மனதிற்கு இதமளிப்பதாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் X தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஏன் பெருங்கடல்கள் பச்சை நிறத்தில் தோன்றும்?

சில சமயங்களில் கடல் நீலத்தைத் தவிர வேறு நிறங்களாகத் தோன்றும். உதாரணமாக, அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள அட்லாண்டிக் பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படும். இது ஆல்கா மற்றும் தாவர வாழ்க்கையின் இருப்பு காரணமாகும். ஒளிச்சேர்க்கை உயிரினங்களில் குளோரோபில் உள்ளது , இது பச்சை நிறத்தில் தோன்றுவது மட்டுமல்லாமல் சிவப்பு மற்றும் நீல ஒளியையும் உறிஞ்சுகிறது. பைட்டோபிளாங்க்டனின் வகையைப் பொறுத்து, நீர் நீல-பச்சை முதல் மரகத-பச்சை வரை தோன்றும்.

மஞ்சள், பழுப்பு மற்றும் சாம்பல் பெருங்கடல்கள்

கடல் மேகமூட்டமான வானத்தின் கீழ் சாம்பல் நிறமாகவோ அல்லது தண்ணீரில் நிறைய வண்டல் இருக்கும் போது பழுப்பு நிறமாகவோ தோன்றும், ஒரு நதி கடலில் கலக்கும் போது அல்லது புயலால் தண்ணீர் கிளர்ந்தெழுந்த பிறகு.

வண்டலின் வேதியியல் கலவை நீரின் நிறத்தில் ஒரு பங்கு வகிக்கிறது. டானின்கள், எடுத்துக்காட்டாக, தண்ணீரை கருப்பு, பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாற்றும். தண்ணீரில் உள்ள வண்டல் நிறைய ஒளிஊடுருவுவதற்கு பதிலாக ஒளிபுகா செய்கிறது.

சிவப்பு பெருங்கடல்கள்

சில சமுத்திரங்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும். ஒரு குறிப்பிட்ட வகை பைட்டோபிளாங்க்டன் "சிவப்பு அலையை" உருவாக்க போதுமான அதிக செறிவை அடையும் போது இது நிகழ்கிறது. சில நேரங்களில் பாசிகள் நச்சுகளை தண்ணீரில் வெளியிடுகின்றன, ஆனால் அனைத்து சிவப்பு அலைகளும் தீங்கு விளைவிப்பதில்லை.  மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ள கரேனியா ப்ரீவிஸ் ,  செசாபீக் விரிகுடாவில் உள்ள அலெக்ஸாண்டிரியம் மோனிலேட்டம் மற்றும் லாங் ஐலேண்ட்  சவுண்டில்   உள்ள மெசோடினியம் ரப்ரம் ஆகியவை சிவப்பு ஆல்கா மற்றும் கடல் சிவப்பாக இருக்கும் இடங்களுக்கு எடுத்துக்காட்டுகள் .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODETVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு
Minister SekarBabu: ”களத்திற்கே வராத தற்குறி தளபதி” விஜயை கடுமையாக விமர்சித்த திமுக அமைச்சர் சேகர்பாபு
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
Embed widget