மேலும் அறிய

தமிழ் மண்ணின் மைந்தனுக்கு ஆதரவு! முதல்வரிடம் நயினார் நகேந்திரன் வேண்டுகோள்! திமுகவின் முடிவு என்ன?

பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்

குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் சி.பி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்குமாறு  தமிழக பாஜக தலைவர் நயினார் நகேந்திரன் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. 

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:

குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து அந்த் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாஜக அரசும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மும்முரமாக ஈடுப்பட்டது.

இதில் பாஜக சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவரும் மகாராஷ்டிரா மாநில ஆளுநருமான சி.பி ராதாகிருஷ்ணன் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரான நயினார் நகேந்திரன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நயினார் அறிக்கை:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முக ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக வேண்டுகோள்! நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மாண்புமிகு மகாராஷ்டிரா ஆளுநருமான அண்ணன் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இண்டி கூட்டணியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன்.

தென் பாரதத்தில் இருந்து ஒரு பெருமைமிகு தமிழரை, மூத்த தலைவரை, துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது தமிழகத்திற்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம் ஆகும்.

நவீன் பட்நாயக் செய்த செயல்

இத்தருணத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வை நினைவுபடுத்த விரும்புகிறேன். 2022-இல் நமது மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக அறிவித்த போது, ஒடிசா மண்ணின் மகளான அவரை முன்னாள் ஒடிசா முதல்வர் திரு. நவீன் பட்நாயக் அவர்கள் கட்சி வித்தியாசங்களையும், அரசியல் மாறுபாடுகளை தாண்டி தனது கட்சியினரை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

முதல்வருக்கு வேண்டுகோள்:

திரு. பட்நாயக் அவர்களுக்கு அன்றிருந்த பெருந்தன்மையும், மாநிலப் பற்றும் திமுகவிற்கும், அதன் தலைவரும், தமிழக முதல்வருமான திரு. 
முக ஸ்டாலின் அவர்களுக்கும் இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.ஆகவே, நமது தமிழ் மண்ணின் மைந்தரான அண்ணன் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தனது முழு ஆதரவையும் நல்குமாறு மாண்புமிகு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்!

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

திருவாரூர் விளைநிலங்கள் அழிப்பு: முறைகேடான சூரிய மின்சக்தி ஆலையை தமிழக அரசு தடுத்து நிறுத்துக - சீமான்
திருவாரூர் விளைநிலங்கள் அழிப்பு: முறைகேடான சூரிய மின்சக்தி ஆலையை தமிழக அரசு தடுத்து நிறுத்துக - சீமான்
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
வாகனச் சக்கரத்தின் கீழ் எலுமிச்சை வைப்பது ஏன்? ஆன்மீக நம்பிக்கைக்கு பின்னால் உள்ள உண்மையான அறிவியல்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசிய என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
Embed widget