பால் விலை உயர்வை கண்டித்து கரூரில் பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர் தபால் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மத்திய மாநகர தலைவர் சக்திவேல் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டணம் மற்றும் பால் கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில், பால் கட்டணம் மின் கட்டணம் உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மத்திய மாநகர தலைவர் சக்திவேல் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டணம் மற்றும் பால் கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க பிரிவு தலைவர் செல்வம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பால் கட்டணம் மின் கட்டணம் உயர்வுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் உயர்த்திய கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதே போல மாவட்ட முழுவதும் 17 இடங்களில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலையில் பால், மின் கட்டண உயர்வு, சொத்து வரி, வீட்டு வரி உயர்வினை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் நகர பாஜக சார்பில் பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் சொத்து வரி மற்றும் வீட்டு வரி உயர்வினை கண்டித்து நகர பாஜக தலைவர் கணேசன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில மகளிர் அணி துணை தலைவர் மீனா வினோத் குமார் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.விலை உயர்வினை கண்டித்தும், தமிழக அரசு விலை உயர்வினை திரும்ப பெறக் கூறியும் கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்.
மேலும் குளித்தலை பகுதிக்கு அறிவிக்கப்பட்ட மருதூர் கதவணை திட்டத்தை நிறைவேற்ற வில்லை எனவும், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வேறு பகுதிக்கு மாற்றியதை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர். இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதேபோல் அய்யர்மலை கடைவீதியில் குளித்தலை ஒன்றிய பாஜக தலைவர் பொன்.ரஞ்சித் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் விலைவாசி உயர்வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.