H Raja Arrest: பெரம்பலூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா கைது...ஏன் தெரியுமா?
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்
பெரம்பலூர், திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது செய்யப்பட்டார்.
திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு அரசு விதித்த தடையை மீறி சென்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் H. ராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திண்டிவனத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
திண்டிவனம் வ.உ.சி திடலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்கம் மற்றும் பட்ஜெட் விளக்கம் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற இருந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் H.ராஜா, மைனாரிட்டி மோட்சா தேசிய தலைவர் வேலூர் சையது இப்ராஹிம் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சமூக வலைத்தளங்களில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, இழிவாக பேசிய H.ராஜாவை திண்டிவனம் வராதே. திரும்பி செல். இல்லையேல் திருமா திசை நோக்கி மண்டியிட்டு மன்னிப்பு கேள். என்ற வாசகத்துடன் போஸ்டர் பதிவிடப்பட்டிருந்தது.
அதேபோல் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சேரன் சமூக வலைத்தளத்தில் இன்று பொதுக்கூட்டத்திற்கு திண்டிவனம் வருகின்ற H.ராஜாவிற்கு திண்டிவனம் ஆர்.எஸ் பிள்ளை வீதி அருகே கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பதிவிட்டிருந்தார்.
இதனால் திண்டிவனம் நகரத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்படாமல் இருக்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் பெரும்பான்மையான போலீசாரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் திண்டிவனம் நகர காவல் நிலையத்தில் இன்று காலை குவிக்கப்பட்டனர்.
கைது:
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை தேசிய செயலாளர் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்த நிலையில் எச் ராஜா வை பெரம்பலூர் அருகே உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக செயற்குழு உறுப்பினர் H ராஜாவை கைது செய்தனர்.
H ராஜாவை கைது செய்யப்பட்ட நிலையில் விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் பாஜகவினர் சாலைமறியல் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.