மேலும் அறிய

Nainar Nagendran:: ‘தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் ஆசை வருகிறது” - நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு

நாங்களும் கேட்போம் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும், எப்படி ஆந்திரா, தெலுங்கானா பிரிந்து இருக்கிறதோ. அதேபோன்று தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருநெல்வேலி பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும் பொழுது,  “தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க முடியாது என்று நினைக்க வேண்டாம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம்” என்றார். தமிழ்நாடு தனி நாடு என்று ஆ. ராசா பேச்சை குறிப்பிட்டு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பேசியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனி நாடு பற்றி நான் பேசவில்லை. அது அவருடைய சொந்த கருத்து. ஆனால் என்னுடைய ஆசையும் அது தான். ஆ. ராசாவுக்கு தனி நாடு வேண்டும் என்ற ஆசை இருந்தால் எனக்கும் தமிழ் நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அப்போது தான் நிர்வாகம் செய்ய முடியும். நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி, தென்காசியை இரண்டாக பிரித்தனர். ஆ. ராசா சொன்ன பிறகே எனக்கும் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இரண்டாக பிரித்தால் இன்னும் பல திட்டங்களை கொண்டு வர முடியும். 

ஒரு மாநிலத்தில் இரண்டு இஞ்சின் ஒரே இடத்தில் இருந்தால் தான் நல்லபடியாக ஓட்ட முடியும். பாஜக ஆட்சி தமிழகத்திலும் மத்தியிலும் இருந்தால் தான் நல்ல பல திட்டங்களை கொண்டு வர முடியும் என்பது என்னுடைய யோசனை. நாங்களும் கேட்போம் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும், எப்படி ஆந்திரா, தெலுங்கானா பிரிந்து இருக்கிறதோ. அதேபோன்று தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்.. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று இனி தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறலாம்” என்று கூறினார்.

மேலும், “எப்போதாவது வெற்றி பெறக்கூடிய திமுக இந்த முறை வெற்றி பெற்றிருக்கிறது. இரண்டு மூன்று காரியங்களை மட்டும் செய்து இருந்தால் தமிழ்நாட்டில் மீண்டும் எடப்பாடி முதலமைச்சர் ஆகியிருப்பார்” என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
CM Vijay: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget