மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

’சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் திமுகவின் பொலிட்டிக்கல் ஸ்டண்ட்’ – பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்..!

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரிய தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானம் சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரும் அரசினர் தனித்  தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். குடியுரிமை திருத்தச் சட்டம் மதச்சார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை என்றும், அகதிகளாக வருவோரை மதரீதியாக பாகுப்டுத்தி பார்க்கும் வகையில் சிஏஏ சட்டம் உள்ளதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய முதலமமைச்சர் மு.க.ஸ்டாலின், “சிஏஏ சட்டம் இலங்கை தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மாபெரும் துரோகம் ஆகும். இலங்கைத் தமிழர்களைப் பற்றி ஒன்றிய அரசு கவலைப்படவில்லை. சட்டப்படியான சமத்துவம் சட்டப்படியான பாதுகாப்பை அரசு மறுக்கமுடியாது. சட்டத்திருத்தம் மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்க வகை செய்யும். சிஏஏ குறித்த தீர்மானத்தை ஆதரிக்க தைரியம் இல்லாததால் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது” என்று கூறினார்.

’சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் திமுகவின் பொலிட்டிக்கல் ஸ்டண்ட்’ – பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்..!

இதனைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, நேரமில்லா நேரத்தில் பேச அனுமதி கொடுக்கவில்லை என்று கூறி சட்டப் பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை  ரத்து செய்யக் கோரிய அரசின் தனித் தீர்மானம் சட்டப் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இன்று CAA சட்டத்தை இரத்து செய்ய @CMOTamilnadu கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம்.
3 நாடுகளில் மதரீதியாக சிறுபான்மையினராக பாதிக்கப்பட்டு வருபவர்கள்
இந்த சட்ட திருத்தத்தில் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதுதான் அடிப்படை.

As usual Political stunt of @arivalayam

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 8, 2021

">

இது தொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் “இன்று சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். 3 நாடுகளில் மத ரீதியாக சிறுபான்மையினராக பாதிக்கப்பட்டு வருபவர்கள், இந்த சட்ட திருத்ததில் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது தான் அடிப்படை. இது திமுகவின் வழக்கமான பொலிடிக்கல் ஸ்டண்ட்” என அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் வகையில், மத்திய அரசு சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழ்நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அச்சட்டத்திற்கு எதிர் கட்சியாக திமுக இருந்த போது, கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சிஏஏ அமல்படுத்தப்படாது என சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்து இருந்தார். மேலும் திமுக தனது தேர்தல் வாக்குறுதியிலும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தெரிவித்து இருந்தது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், தேர்தல் வாக்குறுதியின் படி அச்சட்டத்தை இரத்து செய்யக் கோரி, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget