மேலும் அறிய

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு : மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார் எஸ்.வி சேகர்..

பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கில், பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி. சேகர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக உறுதிமொழி பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 

முன்னதாக, பெண் பத்திரிகையாளர்கள் பணிபுரிவது குறித்து தரக்குறைவான கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கடந்த 2018-ஆம் ஆண்டு தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு  பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மிதார் மொய்தீன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதை விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு எஸ்.வி.சேகர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 3 பிரிவுகள் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் ஒரு பிரிவு என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இதுதொடர்பான வழக்கு சென்னை எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கிலிருந்து எஸ்.வி.சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை, ஆஜராக விலக்கு, வழக்கை ரத்துசெய்யவேண்டும் போன்ற  கோரிக்கைகளுடன் எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கலிஃபோர்னியாவில் உள்ள திருமலை சடகோபன் என்பவர் பக்தி மற்றும் தேசப்பற்று தொடர்பாக அனுப்புபவர் என்பதால், அதைபோல நினைத்து அவர் 2018 ஏப்ரல் 19-இல் எழுதியதை ஃபார்வேர்ட் மட்டுமே செய்ததாகவும், பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு என தெரியவந்ததால், உடனடியாக ஏப்ரல் 20-ஆம் தேதியே நீக்கிவிட்டதுடன், உடனடியாக தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருந்ததாகவும் வாதிட்டார். தனிமனித ஒழுக்கமும், பெண்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாகவும், பதிவை நீக்கி மன்னிப்புக்கோரிய பிறகும் வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அப்போது நீதிபதி, முகநூலில் வந்த தகவலை படிக்காமல் ஃபார்வேர்ட் செய்துவிட்டேன் என கூறுவதற்கு எஸ்.வி.சேகர் எழுதப்படிக்க தெரியாதவரா என கேள்வி எழுப்பினார். சமூகத்தை எப்படி மதிக்கவேண்டும் என புரிந்துகொள்ளமுடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget