அதிமுகவிலிருந்து ஆள் இறக்கிய திமுக! மேஜர் பாய்ண்ட் பிடித்த அண்ணாமலை! கலக்கத்தில் இபிஎஸ்!
”உங்களில் ஒருவன்” தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.

டப்பிங் பேசுவது முதலமைச்சருக்குத்தான் தேவை எனவும் எங்களுக்கு தேவையில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
”உங்களில் ஒருவன்” தலைப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
அதில், பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “பாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவதில் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக திமுக தலைமையிலான கூட்டணி உள்ளது. கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை. டெல்லி தேர்தல் முடிவு குறித்து பழனிசாமி அறிக்கை பாஜகவின் அறிக்கை போன்று தான் இருக்கும். பழனிசாமியின் குரலே, பாஜகவிற்கான டப்பிங் குரல் தான். அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணி என திமுக சொல்வதை அவர் நிரூபிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னுடையெ தோல்விகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.” என பேசியிருந்தார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “முதலமைச்சருக்குத்தான் இன்று டப்பிங் தேவைப்படுகிறது. அவருடைய குரலாக அறிவாலயத்தில் இருந்து பல பேர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அடிச்சிடுவேன், மிதிச்சிடுவேன் என்றெல்லாம்.
முதலமைச்சருக்கு டப்பிங் தேவைப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எங்கேயும் டப்பிங் தேவையில்லை. பிரதமர் மோடி அமெரிக்கா சென்றால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழ்கிறார். பிரான்ஸ் சென்றால் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு. இதையெல்லாம் ஸ்டாலின் டிவியை போட்டு சவுண்டு அதிகமாக வச்சி பார்க்கணும். உலக அளவில் இந்தியாவின் அங்கீகாரம் என்ன? மோடியின் அங்கீகாரம் என்ன என்று பார்க்க வேண்டும். 27 ஆண்டுகள் கழித்து டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணம்? லோக் சபா தேர்தல் பாஜக வலிமையடைந்துவிட்டது என்று முதலமைச்சர் பேசினார். அதன் பிறகு ஹரியான வெற்றி பெற்றுள்ளோம். மகாராஷ்டிரா வெற்றி பெற்றுள்ளோம். டெல்லி வெற்றி பெற்றுள்ளோம். பீகார் வெற்றி பெற போகிறோம். அதனால் முதலமைச்சர் மறந்து விடக்கூடாது. பாராளுமன்றத்தேர்தலில் 7 சதவீத வாக்குகளை இழந்திருக்கிறார்.
2026 தேர்தலில் 20 சதவீத வாக்குகளை இழப்பார். அதனால் டப்பிங், கதை, திரைக்கதை வசனமெல்லாம் அவரது பையனுக்கு தேவைப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு டப்பிங் பண்ண சந்தானம் அண்ணன் தேவைப்படுகிறார். முதல்வர் ஸ்டாலின் ஐயாவுக்கு டப்பிங் பண்ண அமைச்சர்கள் தேவைப்படுகிறார்கள். அதுவும் திமுகவில் இல்லை. அதிமுகவில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். தோப்பு வெங்கடாச்சலத்திற்கு புது பதவி கொடுக்கிறார்கள். திமுகவில் சக்தி இல்லை என்பதை முதலமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா? 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்துள்ளனர். அதனால் டப்பிங் எங்களுக்கு தேவையில்லை. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள்தான் திமுகவுக்கு டப்பிங் செய்துகொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு தேவையில்லை” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

