Annamalai On Governors' Security : ஆளுநரின் பாதுகாப்பில் சமரசம்.. முதலமைச்சர் பதவி விலகவேண்டிய நேரம் இது - அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில், யாரோ ஒருவரை கண்மூடித்தனமாக வெறுக்கிறார்.
மயிலாடுதுறை சென்ற ஆளுநரின் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளது எனவும், முதலமைச்சர் பதவி விலகவேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ”இன்று மயிலாடுதுறையில் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர் என் ரவியின் பாதுகாப்பு முற்றிலும் சமரசம் செய்யப்பட்டது. அவரது கான்வாய் மீது திமுக ஆதரவாளர்கள் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசினர். நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒருவரை கண்மூடித்தனமாக வெறுக்கிறார். அவர் பதவியில் இருந்து விலகுவதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Today in Myladuthurai, Hon Gov of TN Thiru. R N Ravi avl’s security was thoroughly compromised. Hooligans backed by DMK party threw stones & flagpoles on his convoy
— K.Annamalai (@annamalai_k) April 19, 2022
If our CM @mkstalin has a blind hatred of somebody because of his party’s ideology, time for him to demit office!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்