பீகார் தேர்தல் எதிரொலி! தமிழகத்திலும் பாஜக சதி? ரவிக்குமார் ரியாக்ஷன் !
விழுப்புரம் : தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் பாஜகவின் சேவகர் போல செயல்படுகிறார்.

விழுப்புரம் : தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் பாஜகவின் சேவகர் போல செயல்படுவதாகவும் அதனுடைய விளைவுதான் பீகார் தேர்தல் காட்டுவதாகவும், அதிமுக என்பது தனியாக செயல்படும் கட்சி அல்ல பாஜகவின் துணை அமைப்பாக செயல்படும் கட்சியாக உள்ளதாக விசிக எம் பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.நெற்குணம் மற்றும் வழுதாவூர் கிராமங்களுக்கு இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 30 கோடி ரூபாயில் தடுப்பனை கட்டும் துவக்க பணியை எம் பி ரவிக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி துவக்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த விழுப்புரம் எம் பி ரவிக்குமார் பீகார் மாநில தேர்தல் முடிவுகள் என்பது பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது என்று கூறுவதை விட தேர்தல் ஆணையம் செய்த அப்பட்டமான தில்லு முல்லு இன்றைக்கு வெற்றி பெற்றிருக்கிறது. எஸ் ஐ ஆர் என்ற பெயரிலே தகுதி வாய்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பட்டியல் வெளியிட்ட பிறகும் 47 லட்சம் மக்கள் நீக்கபட்டுள்ளனர் லட்சகணக்கானோர் வாக்களிக்க சென்ற போது பெயர் இல்லை என திருப்பி அனுப்பியுள்ளனர். இது எல்லாமே தேர்தல் ஆணையம் அப்பட்டமாக வெளிப்படையாக செய்த தில்லு முல்லு பீகார் தேர்தல் முறையாக நடைபெறவில்லை அதன் விளைவு இப்போது பார்ப்பதாகவும் அடுத்து தேர்தல் நடைபெற உள்ள கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆரை தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது உச்ச நீதிமன்றம் இதில் நல்ல தீர்ப்பினை வழங்கும் என உறுதியாக சொல்ல முடியவில்லை, தேர்தல் நேரத்தில் பார முகமாக செயல்பட்டதாக தெரிவித்தார்.
பீகாரில் எஸ் ஆர் என்ற பெயரில் நடத்தபட்ட மோசடியை தமிழகத்தில் நடைபெறாமல் இருக்க மக்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதிமுக என்பது தனியாக செயல்படும் கட்சி அல்ல பாஜகவின் துணை அமைப்பாக செயல்படும் கட்சியாக உள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி அழித்து ஒழித்து விட்டதாகவும், எஸ் ஐ ஆர் பணி தமிழகத்தில் முழுமையாக செயல்பட்டால் 65 லட்சம் வாக்காளர் இடம்பெறாமல் போக வாய்ப்புள்ளதாக இருக்கும் என்றும் எஸ் ஐ ஆர் தொடர்ந்தால் தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் முறையான தேர்தலாக இருக்காது என குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் ஆணையம் சட்டவிரோதமாக எஸ் ஐ ஆரை செயல்படுத்துவதாகவும், தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் பாஜகவின் சேவகர் போல செயல்படுவதாகவும் அதனுடைய விளைவுதான் பீகார் தேர்தல் காட்டுவதாக தெரிவித்தார்.





















