தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லையா? தமிழக அரசின் ரூல்ஸ் தெரியாத வங்கி அலுவலர்களால் சர்ச்சை!
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டால் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
நாடு முழுவதும் 73ஆவது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.டெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றினார். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகள் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல், சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அவர் தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து டெல்லி அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகு முத்துக்கோன், பெரியார், ராஜாஜி, காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உள்ளிட்டோரின் சிலைகள் இடம் பெற்றன.
ரிசர்வ் வங்கியில் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் பாடபட்டது அங்கிருந்த அதிகாரிகள் யாரும் எழுந்து நிற்கவில்லை கேட்டபோது நிற்க முடியாது என பதில் @CMOTamilnadu நடவடிக்கை எடுக்க வேண்டும் @niranjan2428 @drramadoss @thirumaofficial @Ahmedshabbir20 @Mugilan__C pic.twitter.com/cosUHsWWur
— Nithyanandan (@SaNithyanandan) January 26, 2022
குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட தலைநகரில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தினர். மேலும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில், வங்கி ஒன்றில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டது.
ஆனால் அதற்கு வங்கி ஊழியர்கள் யாரும் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் இதுகுறித்து சிலர் கேட்டபோது எழுந்து நிற்கமுடியாது என அலுவலர்கள் கூறுகின்றனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கவிடப்பட்டால் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் வங்கி அலுவலர்கள் எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலர் கோரிக்கை வைத்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்