மேலும் அறிய

ஆசிரியர்கள் பிற பணிகளில் ஈடுபட தடை: ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: பிற பணிகளில் உள்ள ஆசிரியர்களை உடனடியாகத் திரும்பப் பெற ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு!

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கற்பித்தல் பணியைத் தவிர்த்து அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் இதர அரசுத் துறைகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனடியாகத் திரும்பப் பெற துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், கற்பித்தல் பணியைத் தவிர்த்து பிற அரசுத் துறை அலுவலகங்களிலும், அமைச்சர்களின் தனிச் செயலாளர்களாகவும் பணியாற்றி வரும் ஆசிரியர்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

456 பள்ளிகள்... 70 ஆயிரம் மாணவர்கள்:

புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பில் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 456 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர், விரிவுரையாளர், உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 6,766 பணியிடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் மொத்தமுள்ள பணியிடங்களின் விபரம்:

  • ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள்: 2,457
  • பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்: 2,215
  • விரிவுரையாளர்கள்: 588
  • பாலசேவிகா: 245
  • நடத்துநர்கள்: 233
  • உடற்கல்வி ஆசிரியர்கள்: 199
  • தலைமை ஆசிரியர் நிலை-2: 184
  • ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்: 185
  • பள்ளி நூலகர்கள்: 122
  • தலைமை ஆசிரியர் நிலை-1: 73
  • பாலபவன் பயிற்றுநர்கள்: 51
  • துணை முதல்வர்கள்: 48
  • விரிவுரையாளர்கள் (உடற்கல்வி): 45
  • முதல்வர்கள்: 35
  • பயிற்றுநர்கள் & பயிற்சியாளர்கள்: 64
  • மொத்த பணியிடங்கள்: 6,766

கற்பித்தல் பணி பாதிப்பு:

தற்போது பணி ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த மொத்த பணியிடங்களில் 10 முதல் 20 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாகக் கிடக்கின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்களின் கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நிலைமை இவ்வாறு இருக்க, பள்ளிகளில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் பலர் கல்வித்துறையிலேயே உள்ள எல்.டி.சி. (LDC) மற்றும் யு.டி.சி. (UDC) போன்ற எழுத்தர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிலர் தங்களின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அயல் பணியாக (Deputation) மக்கள் பிரதிநிதிகளின் தனிச் செயலாளர்களாகவும், அமைச்சர்களின் அலுவலகப் பணிகளிலும் சேர்ந்து சொகுசாகப் பணியாற்றி வருகின்றனர். இதனால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது.

ஆளுநரின் அதிரடிக்குக் காரணமான 'கோப்பு':

சமீபத்தில் அமைச்சராகப் பதவியேற்ற நமச்சிவாயம், தவளக்குப்பம் அரசு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைத் தனது தனிச் செயலாளராக நியமிக்க அனுமதி கோரி ஆளுநருக்குக் கோப்பு (File) ஒன்றை அனுப்பியிருந்தார்.

அந்தக் கோப்பை தீவிரமாக ஆய்வு செய்த ஆளுநர் கைலாஷ்நாதன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது ஏற்கனவே சில புகார்கள் இருப்பதைக் சுட்டிக்காட்டினார். அதோடு மட்டுமல்லாமல், "கற்பித்தல் பணியில் உள்ளவர்களை இது போன்ற இதர நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது" என்று கூறி, வேறு தகுதி வாய்ந்த நபரைப் பரிந்துரைக்குமாறு அந்தக் கோப்பை அதிரடியாகத் திருப்பி அனுப்பினார்.

அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு:

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அரசுச் செயலாளர்களை அவசரமாக அழைத்துப் பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

ஆசிரியர்கள் வாபஸ்: பிற அரசுத் துறை மற்றும் அமைச்சர்களின் அலுவலகப் பணிகளில் தற்காலிகமாக ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, மீண்டும் பள்ளி கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

கட்டாய இடமாற்றம்: அரசுத் துறைகளில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்களைக் கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும், குறிப்பாகப் பிராந்திய அளவில் இந்த இடமாற்றங்கள் உடனடியாக நடக்க வேண்டும்.

ஆசிரியர்கள் கலக்கம் – சமூக ஆர்வலர்கள் வரவேற்பு:

ஆளுநரின் இந்த அதிரடி உத்தரவு, பள்ளிகளுக்குச் செல்லாமல் இதர எல்.டி.சி., யு.டி.சி. பணிகளில் சுகம் கண்டு வந்த ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில், ஆளுநர் இந்த உத்தரவை வெறும் அறிவிப்போடு நிறுத்தாமல் தீவிரமாகக் கண்காணித்து, பிற துறைகளில் முடங்கியுள்ள அனைத்து ஆசிரியர்களையும் மீண்டும் வகுப்பறைகளுக்குக் கொண்டு வந்து மாணவர்களின் கல்வியைக் காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget