இப்படி ஒரு திட்டமா? ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
Ayushman bharat card : மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் கார்டு இருந்தால் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறலாம்.

ஆயுஸ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்யத் திட்டம் (AB PM-JAY) என்பது இந்திய அரசின் தேசிய ஆரோக்கியக் கொள்கையின் ஒரு பகுதி ஆக இருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகும். இதன் நோக்கம் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சிகிச்சையை இலவசமாக, பொருளாதார வசதியில் கீழடுக்கில் இருக்கும் 40% மக்களுக்கு, பலவீனமானவர்களுக்கு அளிப்பதாகும். இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய, அரசால் முழுவதுமாக மருத்துவக் காப்பீடு அளிக்கும் திட்டம் ஆகும். இதன் மூலம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் மக்கள்தொகை ஆனது ஐக்கிய அமெரிக்க நாடுகள், மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மொத்தக் கூட்டு மக்கள்தொகையினை விட அதிகம். இத்திட்டம் செப்டப்ம்பர் 2018 இல், இந்திய அரசின் சுகாதரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சகத்தின் உறுதுணையுடன் ஆரம்பிக்கப் பட்டது.
ஆயுஷ்மான் பாரத் கார்டு இருந்தால் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை
மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்கள் ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். ஆனால் இந்த நன்மையைப் பெற ஆயுஷ்மான் பாரத் கோல்டன் கார்டு இருப்பது அவசியம். நீங்கள் இன்னும் இந்த கார்டை வாங்கவில்லை என்றால் அதை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆயுஷ்மான் பாரத் கார்டைப் பதிவிறக்கம் செய்யும் செயல்முறை இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. சில முக்கியமான தகவல்களுடன் நீங்கள் இந்த திட்டத்தின் வலைத்தளத்தில் உள்நுழைந்து இந்த கார்டை நீங்களே பதிவிறக்கம் செய்யலாம்.
சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த கார்டை உங்கள் செல்போன் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
https://beneficiary.nha.gov.in.
இங்கே நீங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற அடிப்படைத் தகவல்களை நிரப்ப வேண்டும்.
தகவல்களை நிரப்பிய பிறகு, உங்கள் மொபைல் போனுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளிடுவதன் மூலம் நீங்கள் போர்ட்டலில் உள்நுழையலாம்.
தொடர்ந்து, உள்நுழைந்த பிறகு 'Beneficiary' பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, 'Scheme Name' விருப்பத்தில் PMJAY என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகு உங்கள் மாநிலம் மற்றும் மாவட்டத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 'Sub Scheme' பிரிவில் PMJAY என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குப் பிறகு ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பட்டியலைக் காண்பீர்கள். உங்கள் KYC சரிபார்ப்பு முழுமையடையவில்லை என்றால் உங்கள் பெயர் ஆரஞ்சு நிறத்தில் தோன்றும்.
KYC சரிபார்ப்பு முழுமையடையவில்லை என்றால், 'Do eKYC' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு ஆதார் OTP மூலம் செயல்முறையை முடிக்க வேண்டும்.
KYC சரிபார்ப்பு முடிந்ததும் உங்கள் பெயர் குடும்ப ஐடியின் கீழ் தோன்றத் தொடங்கும். இப்போது நீங்கள் உங்கள் ஆயுஷ்மான் பாரத் அட்டையைப் பதிவிறக்கம் செய்யலாம்.





















