திருநெல்வேலி பாஜக பிரமுகர் தாக்கப்பட்டாரா? திமுக எம்.பி.ஞானத்திரவியம் மீது புகார் பதிவு!
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன் பாஸ்கருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஞானத்திரவியம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பாஸ்கர். இவரை அந்த மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் அவருடன் வந்தவர்களும் நேற்று தாக்கியதாக நேற்று பாரதிய ஜனதாவினர் புகார் தெரிவித்தனர்.
மேலும் தாக்கிய எம்.பி. பிறகு சிசிடிவி காமிராவை உடைத்ததாகவும் ஆனால் அவர் மீது முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனப் புகார் எழுந்தது. இதையடுத்து பாரதிய ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சி உறுப்பினரான பொன்.ராதாகிருஷ்ணன் பாஸ்கருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஞானதிரவியம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டார். பலமணிநேர போராட்டத்துக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர் மேலும் ஞானதிரவியம் மீதும் முதல் தகவல் அறிக்கை தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க தொண்டரைத் தாக்கிய திமுக எம்.பி ஞானதிரவியம் மீது FIR பதிவு செய்க:
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 9, 2021
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியம் ராதாபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட அப்பகுதி பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரை திருநெல்வேலி மாவட்ட பாராளுமன்ற எம்பி ஞானதிரவியம் மற்றும் அவருடன் வந்த கூட்டம் நேற்று pic.twitter.com/wEBzGCiosS
பா ஜ.க நிர்வாகியை தாக்கிய எம். பி ஞானதிரவியம் மீது FIR பதிவு செய்யாத காவல்துறை, அறப்போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்வது கேவலம். @annamalai_k @ pic.twitter.com/9Ev9KtyZIl
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 9, 2021
திமுகவின் அராஜகப்போக்கை கண்டிக்கிறோம். pic.twitter.com/PiGMh0VJ2x
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) October 9, 2021
இதுகுறித்து பாரதிய ஜனதா தலைமையும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
பாஜகவினரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிய கோரி நேற்று முதல் உணவருந்தாமல் காவல்நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திரு.@PonnaarrBJP அவர்களை இன்று மாநில தலைவர் திரு.@annamalai_k கேட்டுகொண்டதற்கிணங்க போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 10, 2021
தாக்கியவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது pic.twitter.com/6B6OJLOWgW