Asra Garg IPS : ’ரவுடி ராஜ்ஜியத்திற்கு சாவு மணி, வட சென்னைக்கு வரும் அஸ்ரா கார்க் IPS’ அதிர்ச்சியில் உறைந்த Attackers..!
'ரவுடிகளை சுற்றி வளைத்து பிடிப்பதிலும் சுட்டு பிடிப்பதிலும் கெட்டிக்காரரான அஸ்ரா கார்க் வட சென்னையின் கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஐ.ஜி.க்கள் டி.ஐ.ஜிக்கள் என 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆக்ஷன் பிளானில் அமுதா ஐ.ஏ.எஸ்
தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்தவும் நாடாளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் எந்த பெரிய பிரச்னையும் எழுந்திவிடாமல் சமாளிக்கவும் சாமர்த்தியமான அதிகாரிகளை முக்கியமான பணியிடங்களுக்கு மாற்றம் செய்து உள்துறை செயலாளர் அமுதா உத்தரவிட்டிருக்கிறார்.
சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தில் சட்ட ஒழுங்கிற்கு இடையூறாக இருப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகவே சரித்திர பதிவேடுகளில் A+ ரவுடியாக பட்டியலிடப்பட்ட ‘சோட்டா’ வினோத், ரமேஷ் ஆகிய இருவரையும் சமீபத்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது போலீஸ்.
ரவுடிகள் ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி ?
இந்நிலையில், இந்த என்கவுண்டர் ரவுடிகளுக்கு விடப்பட்ட எச்சரிக்கை என்றும் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டால் காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளில் இருந்து இனி தப்பிக்க முடியாது எனவும் ரவுடிகளுக்கு இன்பார்மல் சர்குலர் விட்டிருக்கிறது தமிழக காவல்துறை.
இந்த சூழலில் தான் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் பல்வேறு முக்கிய அதிகாரிகள் முக்கிய பதவிகளுக்கு மாற்றப்பட்டாலும் கவனிக்கத்தக்க வகையில் இருப்பது தென் மண்டல ஐ.ஜி.யாக இருக்கும் அஸ்ரா கார்கின் டிரான்ஸ்பரும் அவர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கும் இடமும் தான். மதுரையில் இருந்தவரை ரவுடிகளின் கிளஸ்டராக இருக்கும் வட சென்னைக்கு மாற்றியிருக்கிறார் உள்துறை செயலாளர் அமுதா.
அஸ்ரா கார்க்கின் புதிய அசைன்மெண்ட்
வட சென்னை எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டு அந்த பகுதி மக்கள் பல்வேறு உயரிய பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் சென்றாலும் இன்னும் அங்கு ரவுடிகளின் ராஜ்ஜியம் ஒழிந்தபாடில்லை. இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படாத முக்கிய ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்குதான், அதிரடிக்கு பெயர் போன அஸ்ரா கார்க் வடசென்னையின் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அஞ்சாதவரை கண்டும் அஞ்சும் ரவுடிகள்
எதற்கும் அஞ்சாதவர், யார் என்ன சொன்னாலும் குற்றம் செய்தரை விட்டுவிடாதாவர், ரவுடிகளுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்பவர் என்ற அடையாளங்களுக்கு பெயர்போன அஸ்ரா கார்க் நியமனத்தால் வட சென்னையின் முக்கிய ரவுடிகள் ஆடிப்போகியிருக்கின்றனர். கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, தொழில் செய்பவர்களை மிரட்டி பணம் பறிப்பது, கடத்தல் என கண்மூடித்தனமாக மனித நேயமின்றி செயல்படும் ரவுடிகளின் அட்டகாசத்தை அழிக்கும் அசைன்மெண்ட்தான் அஸ்ரா கார்க்கிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரவுடிகளை A++, A+, B, C என காவல்துறை வகைப்படுத்தியுள்ள நிலையில், முதற்கட்டமாக வட சென்னையில் இருக்கும் A++, A+ பட்டியலில் இருக்கும் ரவுடிகளை களையெடுக்கும் பணியில் அஸ்ரா கார்க் இறங்கபோகிறார். சென்னையை ஆட்டிப் படைக்கும் ரவுடிகளாக கருதப்படும் சி.டி. மணி, காக்க தோப்பு பாலாஜி, சாம்போ செந்தில், எண்ணூர் தனசேகர் உள்ளிட்டோரும் அவர்ளது கூட்டமும் அஸ்ரா கார்க் நியமனத்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. சி.டி.மணி ஆந்திராவிலும் எண்ணூர் தனசேகர் கடலூர் மத்திய சிறையிலும் இருந்தாலும் ரிமோட் கண்ட்ரோல் போல அவர்களது ஆட்களை வைத்து வட சென்னையிலும் தென் சென்னையிலும் தொடர்ந்து ரவுடியிசம் செய்து வருவதை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்ட தற்போதைய டிஜிபியும் முன்னாள் சென்னை கமிஷனருமான சங்கர் ஜிவால் இப்போது அவர்களுக்கு அஸ்ரா கார்க் மூலம் ஸ்கெட்ச் போட்டிருக்கிறார்.
ரவுடிகளை சுற்றிப் வளைத்து பிடிப்பது ஒரு வகை, சுட்டுப் பிடிப்பது இன்னொரு வகை இது இரண்டிலும் கெட்டிக்காரரான அஸ்ரா கார்க் நியமனத்திற்கு பிறகு மாமுல் கேட்பது முதல் மாடு வெட்டுவது போல மனுஷனை வெட்டுவது வரையிலான வட சென்னையின் ரவுடிகளின் ராஜ்ஜியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு சுவாரஸ்யம் இதோ இருக்கு: