TN Corona Spike: தமிழ்நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு 300-ஐ கடந்தது.. தினமும் 11 ஆயிரம் பரிசோதனைகள் எடுக்க திட்டம்..
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில், தினசரி ஆர்டிபிசிஆர் பரிசோதனை 11 ஆயிரமாக உயர்த்த சுகாதாரத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 300-ஐ கடந்த நிலையில், தினசரி ஆர்டிபிசிஆர் பரிசோதனை 11 ஆயிரமாக உயர்த்த சுகாதாரத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 300-ஐ கடந்து பதிவாகியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 303 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு என்பது 1,530-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 139 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும் கடந்த ஒரு மாத காலமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாட்டிலிருந்து வந்த 3 பேருக்கும், சிங்கப்பூரிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 4,189 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 101 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 497 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனையடுத்து கோவை மற்றும் செங்கல்பட்டில் தினசரி பாதிப்பு 20-ஐ கடந்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் தினசரி எடுக்கப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை 11 ஆயிரமாக உயர்த்த சுகாதார துறை தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார துறை தரப்பில் மாவட்ட நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மருத்துவமனைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வெளியில் செல்லும் போதும் முகக்கவசம் அணிய வேண்டும் என மாநகராட்சி தரப்பிலும் பொது சுகாதாரத்துறை தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆலோசனை கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் “இந்தியாவில் 24 மணி நேரத்தில் 6050 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகமாக கேரளாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 303 பேர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 24,061 ஆக்சிஜன் கான்சண்டேட்டர்களும், 260 PSA பிளாண்ட்டுகளும், 2067 மெட்ரிக் டன் அளவு ஆக்சிஜன் சேமிப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளது. எனவே ஆக்சிஜன், படுக்கைகள், மருந்து கையிருப்பு என அனைத்தும் 100% முழுமையாக உள்ளது” என குறிப்பிட்டார். பாதிப்புகள் அதிகமாக இல்லாமல் இருந்தாலும் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )