TN Covid-19 Update : வளைகாப்பு நிகழ்வின் மூலம் பெருஞ்சோகம் : கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் மருத்துவர்
இந்திய மருத்துவச் சம்மேளனத்தின் புள்ளிவிவரத்தின்படி இதுவரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 269 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் கார்த்திகா என்பவர் மரணமடைந்துள்ளார். 29 வயதான இவர் கொரோனா பாதிக்கப்பட்டபோது கருவுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இவருக்குச் வளைகாப்பு நடத்தப்பட்ட நிலையில் அங்கிருந்த பலருக்கு கொரோனா தொற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவர் கார்த்திகாவும் ஒருவர். தொற்று உறுதியானதும் திருவண்ணாமலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் உடல்நிலையின் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மாலை உயிரிழிந்தார்.
Dr Karthiga MD , 29/F , AN mother , died of Covid Positive today .
— Dr. Maharajan (@DrMaharajan2013) May 23, 2021
The House function seemantham which happened to be a super spreader, lot of her family members turned positive for covid. she was in t.v.malai medical college immediately owing to her pregnancy
1/2 pic.twitter.com/eyMOBvAOTF
மருத்துவர் கார்த்திகாவைப் போலவே அண்மையில் மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த கொரோனா முன்களப்பணியாளரான மருத்துவர் சண்முகபிரியா உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மரணத்துக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவச் சம்மேளனத்தின் புள்ளிவிவரத்தின்படி இதுவரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 269 மருத்துவர்கள் கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுவரை 89 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.