'போன் இல்லாம பேசலாம்.. செல்போனில் ஆன்மிக தீட்சை..' அடடே என அலறவிடும் அன்னபூரணி!
10 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கையில் இருக்கும் smart phone ல் உலகத்தையே பார்த்து விட முடியும் என்றால் நம்பி இருப்பீர்களா? ஆனால் இன்று அது உண்மையே.
சோஷியல் மீடியாவில் மீம் கிரியேட்டர்களிடம் பிரபலமாக இருக்கும் அன்னபூரணி அம்மா மொபைல்போனில் தீட்சை கொடுப்பதாக தனது பக்தர்களுக்கு அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அன்னபூரணி , பேஸ்புக் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.. அதில், ‘தீட்சை மொபைல் போனில் சாத்தியமா? அதனால் உங்களுக்குள் மாற்றத்தை கொண்டு வர முடியுமா? இல்லை. அதற்கு எந்த போனும் கூட தேவையே இல்லை. போனின் உதவி இன்றியே நான் உங்களிடம் செயல்பட முடியும். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
உங்களை சுற்றி இருக்கும் இந்த வெட்டவெளியில் தான் அதற்கான அனைத்து ரகசியங்களும் அடங்கி இருக்கிறது. அனைத்து TV சேனல்களின் மற்றும் ரேடியோ சேனல்களின் அலைவரிசைகள் உங்களை சுற்றியே சென்று கொண்டு இருக்கிறது. உங்களால் உங்களை சிறிது டியூன் செய்ய முடிந்தால் எந்த சேனலில் என்ன செய்தி செல்கிறது என்பதை கேட்கவும், என்ன படம் போகிறது என்று பார்க்கவும் முடியும்.
வெறும் 100 ரூபாய் FM Radio வால் இதை கேட்க முடியும். வெறும் 2000 ரூபாய் TV யால் படமே பார்த்து விட முடியும் என்றால் உங்களாலும் அது சாத்தியமே.இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த மனிதனும் தனி மனிதன் கிடையாது. அனைவருக்குள்ளும் ஒரு இயற்கையின் இணைப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
அதை வைத்து பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் phone இல்லாமல் உரையாடவும் முடியும். பார்க்கவும் முடியும். உணர்வு பரிமாற்றத்தை நிகழ்த்தவும் முடியும். அதனால்தான் கூறுகிறேன் phone என்பதே அதிகப்படியான ஒன்றுதான்.
ஒரு குரு தான் அடைந்த வெட்ட வெளியின் தன்மையை தன் தொடுதல் மூலமாகவும், பார்வையின் மூலமாகவும் உணர்வாகவே மற்றவருக்குள் செலுத்தி உங்கள் உணர்வை செயல்பட தூண்டுவர். அந்த உணர்வே பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கிறது. அதனால் அதை உங்கள் உணர்வு தளத்தில் செயல்பட சில சூட்சுமங்கள் மூலம் செய்து விட முடியும். அதைதான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் கையில் இருக்கும் smart phone ல் உலகத்தையே பார்த்து விட முடியும் என்றால் நம்பி இருப்பீர்களா? ஆனால் இன்று அது உண்மையே. 10 வருடங்களுக்கு முன்பு சுண்டு விரலின் நகம் அளவில் உள்ள கார்டில் 100 படங்களின் பாடல்களை சேமிக்க முடியும் என்றால் சிரித்து இருக்க மாட்டீர்களா?
ஆனால் இன்று... விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் மெய்ஞானம் என்ற உடனேயே திருவள்ளுவர், திருமூலர், சித்தர்கள், ஓஷோ என்று ஓடுகிறீர்களே ஏன்? இயற்கையை ஏன் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். ஓஷோ வந்த பொழுது அவரை ஏற்றுக்கொண்டீர்களா? இல்லையே .
இயற்கை நினைத்தால் இங்கு எதுவும் சாத்தியம். அது தினமும் உங்கள் வீட்டுக்கதவை தட்டிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் தான் அதற்கு வழி விட மறுக்கிறீர்கள். எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு வாருங்கள். இப்படித்தான் என்று முடிவு செய்யாதீர்கள். அது இயற்கைக்கு முரனானது. ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பமே. இயற்கை அதற்கு முழு சுதந்திரம் அளித்திருக்கிறது’ எனப்பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்