Annamalai: ஸ்விம்மிங், சைக்கிளிங், ரன்னிங்கில் கலக்கும் அண்ணாமலை.! அரசியல் மட்டுமல்ல விளையாட்டிலும் அண்ணன் கெத்து தான்
Annamalai: கோவா IRON MAN விளையாட்டுப் போட்டியில் பாஜக நிர்வாகியான அண்ணாமலை சைக்கிளிங், ஸ்விம்மிங், ரன்னிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அசத்தியுள்ளார்.

அண்ணாமலையின் அதிரடி அரசியல்
நாடு முழுவதும் பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் தென் மாநிலங்களில் குறிவைத்த பாஜக தலைமை முதலில் கர்நாடகாவில் ஆட்சி அமைத்தது.தெலுங்கானாவில் கூட்டணி ஆட்சியை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் மீது குறிவைத்த தேசிய தலைமை அதிரடி அரசியல் மேற்கொள்ளும் வகையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழக அரசியல் களத்தில் இறக்கியது. அண்ணாமலையின் அதிரடி அரசியல் ஆளுங்கட்சியான திமுகவிற்கே சவலாக இருந்தது. தினந்தோறும் போராட்டம், பேட்டி, வீடியோ, ஆடியோ என ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்தது. பெரும்பாலான இளைஞர்கள் அண்ணாமலையை பாலோ செய்ய தொடங்கினார். இந்த நிலையில் தான் அரசியல் காரணங்களுக்காக அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து தேசிய தலைமை மாற்றியது. இதனையடுத்து பெரிய அளவில் அரசியல் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையென்றாலும், அவ்வப்போது திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
விளையாட்டிலும் அசத்தும் அண்ணாமலை
இந்த நிலையில் அரசியல் அப்பாற்பட்டு படிப்பு, விளையாட்டிலும் அண்ணாமலைக்கு அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். லண்டன் சென்று 3 மாத அரசியல் தொடர்பான படிப்பையும் படித்திருந்தார். வீட்டில் விவசாயம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.
Th @annamalai_k Anna has started the 21 KM RUN 🏃♂️ after successfully completing 1.9 km sea swimming 🌊 and 90 km cycling 🚴♂️!
— Amar Prasad Reddy (@amarprasadreddy) November 9, 2025
The Ironman spirit continues!
🔥🔥🔥 pic.twitter.com/WM0qdLyzCN
அடுத்ததாக கிரிக்கெட் போட்டியிலும் கலந்து கொண்டு கலக்கியிருந்தார். இந்த நிலையில் தான் கோவாவில் நடைபெற்ற IRON MAN விளையாட்டுப் போட்டியில் அண்ணாமலை கலந்து கொண்டு அசத்தியுள்ளார். இந்தியாவில் இருந்து பல மாநிலங்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டிருந்த கோவா IRON MAN விளையாட்டுப் போட்டியில் பாஜக நிர்வாகியான அண்ணாமலை சைக்கிளிங், நீச்சல், ரன்னிங் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டார்.
விளையாட்டில் கலக்கிய அண்ணாமலை
சுமார் 1.9 கிமீ ஸ்விம்மிங் போட்டி, 90 கிமீ சைக்கிள் போட்டி, 21 கிமீ ஓடப்பந்தயத்திலும் கலந்து கொண்டு அண்ணாமலை அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களை அண்ணாமலை ஆதரவாளர்கள் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள். அண்ணாமலை அரசியலில் மட்டுமல்ல விளையாட்டிலும் கெத்து தான் என உற்சாகத்தோடு பதிவிட்டு வருகிறார்கள்.





















