மேலும் அறிய

Anbumani Ramadoss: “ராமதாஸ் உத்தரவு செல்லாது; நிர்வாகப் பணிகளில் தலையிட அதிகாரமில்லை“ - அன்புமணி தரப்பு அதிரடி

அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்த நிலையில், அவருடைய உத்தரவு செல்லாது என்றும், நிர்வாகத்தில் தலையிட நிறுவனருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அன்புமணி தரப்பு கூறுகிறது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பதிலளிக்க அவகாசம் கொடுத்தும், அவர் பதிலளிக்காததால், குற்றச்சாட்டுகள் உறுதியாகின்றன என்றும், அதனால், அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தே நீக்குவதாகவும் அதிரடியாக அறிவித்தார். இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி தரப்பு, ராமதாஸின் உத்தரவு செல்லாது என்றும், நிர்வாகத்தில் தலையிட அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.

“ராமதாஸ் உத்தரவு செல்லாது; நிர்வாகப் பணிகளில் தலையிட நிறுவனருக்கு அதிகாரமில்லை“

பாமக நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பிற்கு, அன்புமணி தரப்பிலிருந்து பதிலளிக்கும் விதமாக பேசிய பாமக செய்தித் தொடர்பாளர் பாலு, அன்புமணியை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸிற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி விதிகளின்படி, அன்புமணியே பாமக-வின் தலைவர் என்றும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி, 2026 ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணிதான் பாமக தலைவராக தொடர்வார் என்றும் பாலு தெரிவித்துள்ளார்.

அதோடு, தலைவர், பொருளாளர், செயலாளர் பதவியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளதாகவும், அன்புமணி தரப்பு நிர்வாகிகளையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

அதனால், கட்சி விதிகளின்படியும், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தின்படியும், நிறுவனர் ராமதாஸின் அறிவிப்பு செல்லாது என்றும், ராமதாஸின் உத்தரவு பாமக-வை கட்டுப்படுத்தாது என்றும் பாலு தெரிவித்துள்ளார்.

பாமக தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணணும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்வதாக கூறியுள்ள அவர், பாமக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தலைவருக்கே அதிகாரம் உள்ளதாக,  பாமக-வின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக இந்த தகவல்களை பகிர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

அன்புமணிக்கு கெடு விதித்திருந்த நிறுவனர் ராமதாஸ்

பாமக-வில் நடந்துவரும் அதிகாரப் போர் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி, ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதோடு, அந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி 31-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனால், அந்த கால கெடுவிற்குள் அன்புமணி பதில் அளிக்காததால், கடந்த 4-ம் தேதி தைலாபுரத்தில் நடந்த நிர்வாக குழு கூட்டத்தில், அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு, செப்டம்பர் 10-ம் தேதிக்குள்(நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கும் அன்புமணி பதில் அளிக்காவிட்டால், கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்றுவரை அதற்கும் அன்புமணி ராமதாஸ் பதில் அளிக்காத நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர காலக்கெடு வழங்கப்பட்டது. ஆனாலும், அந்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் அளிக்காததால், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் உண்மையானது, சரியானது என உறுதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதனால், பாமக செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? ஆதம்பாக்கத்தில் உருவான இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!
பறக்கும் ரயிலுக்கு மேலே மெட்ரோ ரயிலா? இந்தியாவின் முதல் விசித்திர ரயில் பாதை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget