மேலும் அறிய

அன்புமணி ராமதாஸ் அதிரடி நீக்கம்: பாமகவில் பரபரப்பு - ராமதாஸ் கடும் முடிவு ஏன்?

பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கிய ராமதாஸ் அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம்.

விழுப்புரம்: பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம். செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை எனத் தெரிவித்தார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் 1.9.2025 ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததின் முடிவின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பி வைத்த 16 குற்றச்சாட்டுகளுக்கும் எந்தவித பதிலும் அளிக்காமல் அவகாசம் இருமுறை கொடுத்தும் பதில் ஏதும் எழுத்து பூர்வமாகவும் நேரில் வந்து விளக்க அளிக்கவில்லை. அன்புமணி மீது சொல்லப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க எந்த நியாயமும் இல்லை என்பதால் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிக்காமல் அன்புமணி உள்ளதை அவர் ஒப்பு கொண்டார் என்பது தனது அனுமானம் என்று கூறினார். அன்புமணி மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானவை என கருதப்படுவதாலும் தான் தோன்றிதனமாக தகுதியற்ற அரசியல்வாதி என அன்புமணி என்பதை நிரூபித்துள்ளதாகவும், கட்சியை அழிக்க முயற்சிக்கும் செயல் என தெரியவருவதால் கட்சி விரோத போக்கு என முடிவு செய்யப்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார்.

அன்புமணியை நீக்கியதன் மூலம் கட்சி நிர்வாகிகள் யாரும் அன்புமணியுடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என்றும் கட்சி விரோத நடவடிக்கையில் பிற்காலத்தில் எவரேனும் ஈடுபட்டதால் இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தார். 

கட்சி அமைப்புகள் விதிகள், ஜனநாயக விதிப்படி நிறைய வாய்ப்புகள் கொடுத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அன்புமணி உடன் உள்ளவர்கள் தனி கட்சியாக செயல்படுவதை போல் இருக்கின்றனர். அவர்கள் மீது வருத்தம் இருந்தாலும் அவர்களை மன்னிக்க தாயாரக உள்ளதாகவும், அன்புமணியுடன் உள்ள பத்து பேருக்கும் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் உதவி செய்து வளர்த்துவிட்டதாகவும், வளர்த்து விட்டவர்களை யாரென்று சொல்ல விரும்பவில்லை, மூத்தவர்கள் நான்கு ஐந்து பேர் அன்புமணிக்கு அறிவுரை கூறியபோது அதை கேட்காமல் அன்புமணி செயல்பட்டார் மரியாதைக்குரிய பழ கருப்பையா தந்தையிடம் மகன் தோற்பது தோல்வி அல்ல.

தந்தை சொல்லை கேட்டு நடந்து கொள்ள வேண்டும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என அழகாக பழ.கருப்பையா தெரிவித்திருக்கிறார். மூத்தவர்கள் சொல்வதை அமிர்தம் போல் கேட்காமல் அன்புமணி இருந்துள்ளதாகவும், பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வந்தபோது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என தெரிவித்தார். 

பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பானமை அன்புமணிக்கு இல்லை, தன்னுடைய இரா. என்ற தலைப்பெழுத்தினை மட்டும் அன்புமணி போட்டுக்கொள்ளலாம் என் தெரிவித்தார். 

பாமகவை 45 ஆண்டுகள் ஓடி ஓடி உழைத்து ராந்தல் விளக்கில் உழைத்து கஞ்சியோ கூழோ குடித்து 96 ஆராயிரம் கிராமங்கள் சென்று கஷ்டப்பட்டு பாமகவை உருவாக்கி வளர்த்தாகவும் இந்த கட்சியில் சேறுகிறவர்கள், சேர்ந்த பிறகு பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டன. அரசியல் பயிலரங்கமும் தொடங்கி இன்று வரை நடத்தி வருவதாகவும் அதிலையே அன்புமணிக்கு நம்பிக்கை இல்லை ஆதரவும் இல்லை என கூறினார். அன்புமணிக்கு ஆலோசனயாக தனியாக கட்சியை அன்புமணி ஆரம்பித்து கொள்ளலாம் தனி கட்சி ஆரம்பித்து கொள்ள மூன்று முறை தான் தெரிவித்துள்ளதாகவும், தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சியில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை இல்லை அது பிள்ளையாக இருந்தாலும் மற்றவர்களாக இருந்தாலும் கட்சி விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை குழு இரண்டு முறை விவாதித்து கடிதம் அனுப்பட்டது. அதற்கு கடிதத்தை பெற்றுகொண்டு பதில் ஏதும் அளிக்காததால் இந்த முடிவை தெரிவிப்பதாக கூறினார். அன்புமணியை நீக்கிய முடிவு பாமகவிற்கு பின்னடைவு கிடையாது, பயிர் செய்தால் களை முளைக்க தான் செய்யும் அதனால் பயிர் செய்யாமல் இருக்க முடியாது, கட்சியின் வளர்ச்சிக்கு குந்தமாக இருந்த அன்புமணியை நீக்கிவிட்டேன், அன்புமணி கட்சியை தொடங்கினாலும் அந்த கட்சி வளராது என தெரிவித்தார். 

இதனை இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் முடிக்க விடல் என்ற குறளை சுட்டிக்காட்டிய அவர் தன்னோடு 40 முறை பேசியதாக அன்புமணி கூறுவது பொய்,  பல்வேறு கட்சியினர் தெரிவிப்பார்கள் என்னுடைய மனம் எவ்வளவு வருந்திருக்கும் என்பது என்னையே உளவு பார்த்தது யாரை யார் வேவு பார்ப்பது இதைவிட மோசமான செயல் கிடையாது இந்த இடத்தில் வேவு பார்க்க என்ன இருக்கிறது. ஆளும் கட்சி எதிர்கட்சி என்னை பிடிக்காதவர்கள் வேவு பார்க்கலாம் அன்புமணி என்னை வேவு பார்க்கலாமா இது 16 குற்றச்சாட்டுகளில் என் மனசு வருந்திய மிகப்பெரிய குற்றச்சாட்டு என் தெரிவித்தார். 

இந்தியாவின் இரும்பு மனிதர் என தொண்டர்கள் தன்னை கோஷமிட்டு அழைத்தார்கள், ஆனால் அந்த இரும்பே இன்று உருகிவிட்டது. அன்புமணியால் பாமக அழிகிறதே என்பதை மனம் பொருக்காமல் தான் இந்த முடிவு எடுக்க வேண்டியுள்ளதாகவும், தர்மபுரி கூட்டத்திற்கு சென்றபோது மைக் வைக்க கூடாது, 200 பேருக்கு மேல் பார்க்க கூடாது என அன்புமணி தெரிவித்தார். இந்தியாவின் இரும்பு மனிதன் என்று சொல்வார்கள் அந்த இரும்பே இன்று உருக்கியுள்ளார்கள், உயிர் மூச்சு உள்ளவரை ஊமை ஜனங்களுக்காக கோல் ஊன்றி பாடுபடுவேன், எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வி கிடைக்க வேண்டுமென காலங்காலமாக சொல்லி வருகிறேன் ஆனால் எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை, அன்புமணியை நீக்குவதன் மூலம் கட்சியின் பொறுப்பில் உள்ளவர்கள் மேலும் சிறப்பாக தவறு செய்யாமல் கட்சியை வளர்ப்பார்கள் என தெரிவித்து கொள்வதாகவும், கட்சியினரிடைய விருப்பமும் இது தான் எனக் கூறினார்.

பாமக வில் இது எல்லாம் நடக்க முடியாது பாமக வித்தியாசமான கட்சி மற்ற கட்சிகளை பற்றி சொல்ல தனக்கு எந்த அங்கீகாரமும் இல்லை தன்னுடைய கட்சியின் குறைகளை மட்டுமே கூறுவதாகவும், பல கூட்டங்களில் தன்னை விமர்சியுங்கள் அப்போது தான் தன்னை திருத்தி கொள்வேன் எனக் கூறுவேன் இது போன்று இந்தியாவில் உள்ளவர்கள் கூறுவார்களா?

செயல் தலைவர் பதவி என்பது இருக்கும் அது யாருக்கு எப்போ என்பது தெரிவிப்பேன், தேர்தல் ஆணையம் அன்புமணி தலைவர் என்பதை தெரிவிக்கவில்லை அது பொய், தலைமை பண்பு அன்புமணிக்கு இல்லை , அன்புமணியுடன் உள்ள சிலபேர் அன்புமணியை தவறாக வழிநடத்துகிறார்கள், சரியாக வழிநடத்துகிறோம் என பத்து பேர் அன்புமணியிடம் உள்ளவர்கள் தனித் தனியாக வந்து சந்தித்து இந்த காரணத்திற்காக வந்து கூறினால் மன்னிக்கிறேன் மன்னிக்க முடியும், போக தெரியும் என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன் நல்ல யோசனை தனிக்கட்சியை அன்புமணி ஆரம்பிப்பது தான் இது குடும்பம் தந்தை மகன் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை, செயல் தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என திட்டவட்டமாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
Pookie முதல் Cease Fire வரை.. 2025 இல் 2K கிட்ஸ் கூகுளில் தேடிய அதிக அர்த்தங்கள் எது தெரியுமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
SIR: திரும்ப வராத SIR படிவம்.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
1 லட்சம் பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் - தமிழக அரசு அதிரடி !! விண்ணப்பிக்க குவிந்த பெண்கள்
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Embed widget