மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்...!
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அமர்நாத் ராமகிருஷ்ணன் எடுத்த சீரிய முயற்சி தான் தற்போது நதி போல நீள்கிறது. கீழடியில் அகழாய்வு நடைபெற்ற சமயத்தில் அமர்நாத் ராமகிருஷ்ணனை சுற்றி பல்வேறு அரசியல் நடத்தப்பட்டது. இந்த சிக்கல்களால் அவர் மாற்றப்பட்டார். கீழடி அகழ்வாராய்ச்சியின் முழுமையான அறிக்கையையும் அவர் தயாரிக்கக் கூடாது என உத்தரவு வந்தது.
இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் பிரபாகர் பாண்டியன் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார் அதன் வழக்கு விசாரணையில் மத்திய தொல்லியல் துறை 7 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. அப்போது வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, அமர்நாத் ராமகிருஷ்ணனையே முழு அறிக்கையையும் ஏழு மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், மத்திய தொல்லியல் துறை கீழடியில் இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியின் அறிக்கைகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் வந்தபோது..."வைகை நதியையொட்டி 293 இடங்களில் தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 100-க்கும் அதிகமாக வாழ்விடங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கீழடி. இங்குதான் மிகப்பெரிய அளவில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு உள்ளது. அதை முழுமையாக ஆய்வு செய்தால் கி.மு. 6-ம் நூற்றாண்டைவிட பின்னோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. கீழடியில் அழிவுகள் ஏற்பட்டதாக தடயங்கள் இல்லை. மக்கள் அங்கிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழகம் திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 14, 2021
தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள். pic.twitter.com/VqU5kAjhPM
கீழடி அகழாய்வை குறைந்தது 10 ஆண்டாவது மேற்கொண்டால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும். தொல்பொருள்கள் கண்டறியும் இடங்களிலேயே, அவற்றை காட்சிப்படுத்த வேண்டும். நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கினால் அகழாய்வுக் குழிகளை அப்படியே காட்சிப்படுத்தலாம்" என அப்போது தெரிவித்தர்.
இப்படி கீழடியுடன் தொடர்புபடுத்தும் போது அமர்நாத் ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் கனிமொழி மதி, எழுத்தாளரும் மதுரை எம்.பியுமான சு.வெங்கடேஷன் உள்ளிட்ட பலரையும் தவிர்க்க முடியாது. இந்நிலையில் அரசியல் கால்புணர்ச்சி காரணமாக வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் தமிழ்நாட்டிற்கு மீண்டும் தமிழ்நாட்டிற்கு திரும்ப உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்குதென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பளராக நியமிக்கப்பட்டுள்ள குறிப்பிடபட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் தமிழ்நாட்டில் பணியமர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ வலியுறுத்திய நிலையில், கோவாவில் இருந்து மீண்டும் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளார் அமர்நாத்.