அமராவதி அணையில் இருந்து வரும் தண்ணீரால் பாசன வசதி பெறும் 3 மாவட்டங்கள்
கரூர் நகரின் வழியாக, பயணிக்கும் அமராவதி ஆறு கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றுடன் கலந்து, திருச்சி நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கரூர் மாவட்டத்தின் வழியாக பயணிக்கும் அமராவதி ஆற்றில் திருமுக்கூடலூரை நோக்கி செல்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால் கோவை, திருப்பூர், கரூர் போன்ற மாவட்டங்கள் பாசன வசதிகளை பெற்று வருகிறது.
அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர், கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறை, வழியாக கரூர் நோக்கி வருகிறது. இடையில் பெரியாண்டாங்கோவில் அருகே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணை வளாகத்தை சுற்றிலும், அமராவதி ஆற்று தண்ணீர் கடல் போல பாய்ந்து விரிந்து காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கரூர் நகரின் வழியாக, பயணிக்கும் அமராவதி ஆறு கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் வழியாக செல்லும் காவிரி ஆற்றுடன் கலந்து, திருச்சி நோக்கி செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலையில் அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, அணைக்கு 7,550 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 7,473 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு 7,000 கன அடி தண்ணீர் வரத்து
கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,000 கன அடியாக அதிகரித்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 6,206 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 6,175 கன அடியாக இருந்தது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 7,673 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.11 அடியாக இருந்தது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடி தண்ணீர் வந்தது. 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 83 ஆயிரத்து,389 கன அடி தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 269 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 33.72 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 220 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.20 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்