CHN-TRY Flight: சென்னை-திருச்சி விமான பயணிகளுக்கு இனி ஜாலிதான்.. பணம் மிச்சமாகப் போகுது.. எப்படி தெரியுமா.?
சென்னை - திருச்சி இடையே விமானத்தில் அடிக்கடி பறப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி வந்துள்ளது. இதனால், இனி உங்களுக்கு பணம் மிச்சமாகப் போகிறது.

சென்னையிலிருந்து திருச்சிக்கு அடிக்கடி சென்றுவரும் விமானப் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நாளை முதல் கூடுதல் விமான சேவை தொடங்க உள்ளது. இதனால், உங்கள் பணமும் மிச்சமாகப் போகிறது.
சென்னை-திருச்சி இடையே கூடுதல் விமானம் இயக்கும் ஏர் இந்தியா
சென்னை - திருச்சி இடையே, இதுவரை இண்டிகோ நிறுவனம் மட்டுமே தினசரி விமானங்களை இயக்கி வந்தது. இதனால் விமான டிக்கெட் விலையும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், சென்னை - திருச்சி இடையே தினசரி விமான சேவையை நாளை(22.03.25) தொடங்குகிறது.
ஏற்கனவே, இண்டிகோ விமானம் மட்டும் இயங்கி வந்ததால், டிக்கெட்டின் விலை அதிகமாகவே இருந்தது. தற்போது ஏர் இந்தியா கூடுதல் சேவையை தொடங்குவதால், டிக்கெட் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும், இரு நிறுவனங்கள் விமானங்களை இயக்குவதால், பயணிகளை கவர்வதற்காக சலுகைகளை வழங்கும். இதனால், சென்னையிலிருந்து திருச்சி சென்று வரும் பயணிகளுக்கு இனி ஜாலிதான்.
சென்னை - திருச்சி விமான சேவையின் நேரம்
சென்னையிலிருந்த இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம், கீழ்கண்ட நேரத்தில் இயக்கப்படுகிறது.
- சென்னையிலிருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 7.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.
- இதேபோல், திருச்சியிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 9.15 மணிக்கு சென்னை வந்தடையும்.
இந்த விமானத்தில் பிசினஸ் கிளாஸ் வகுப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்ததால், கூடுதல் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்ற பயணிகளின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

