ADMK-EPS: எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி - அதிமுக கர்நாடக மாநில செயலாளர் திடீர் ராஜினாமா
ADMK-EPS: தேர்தலில் போட்டியிட அனுமதிக்காததால் கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ADMK-EPS: கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக மாநில செயலாளர் ராஜினாமா..
எடப்பாடி பழனிசாமி ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே அதிமுகவை கர்நாடகாவில் செயல்படுத்தி வருவதாகவும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுக்கிறது. ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார். எஸ்.டி. குமாரை தொடர்ந்து கர்நாடகா அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓசூரில் செய்தியாளர் சந்திப்பு:
ஓசூரில் செய்தியாளர்கள சந்தித்த அவர், “கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தும், வாய்ப்பு வழங்கப்படவில்லை. யாரை ஆதரித்து பரப்புரை செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அதிமுகவினர் குழம்பியுள்ளனர். அதனால், மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்து கொண்டேன்” என எஸ்.டி. குமார் தெரிவித்தார்.