(Source: Poll of Polls)
MP Ravindranath: 'எடை'யில்லா 'பாடி'க்கு விடை கொடுக்கும் நேரம்... ஓ.பி.ரவீந்திரநாத் தாக்கு..!
அதிமுகவில் எம்பி ரவீந்திரநாத்தை நீக்கி எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதிமுகவில் நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்னை காரணமாக பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இதன்காரணமாக ஈபிஎஸ் தரப்பு சிலரையும், ஒபிஎஸ் தரப்பு சிலரையும் மாறி மாறி கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர். அந்தவகையில் நேற்று எடப்பாடி பழனிசாமி சார்பில் எம்.பி.ரவீந்திரநாத், அவருடைய சகோதரர் ஜெயபிரதீப் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் எம்பி ரவீந்திரநாத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், “இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி.. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி… கழக நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி “அம்மா” அவர்கள் எனக்கு கொடுத்த வரம்.. அதை நீக்கவும்.. ஒதுக்கவும் .. எடுக்கவும்.. கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்… கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம் !!
— P.Ravindhranath (@OPRavindhranath) July 14, 2022
பதவி கொடுத்தவர்களுக்கே.. பாதகம் விளைவித்த இடையில் வந்த ‘எடை’யில்லா ‘பாடி’க்கு விடை கொடுக்க வேண்டி வந்துவிட்டது நேரம்!! ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம்… ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்…” எனப் பதிவிட்டுள்ளார்.
அதிமுக அலுவலகம் சீல் வழக்கு:
மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. இந்த நிலையில் அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கானது இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு தரப்பும் காரசார விவாதம் நடத்திய நிலையில், இறுதியில் பேசிய நீதிபதி பொதுக்குழு அன்று காலை 8.30 மணியிலிருந்து மாலை வரை நடந்ததை வீடியோ ஆதாரமாக சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்று ஒத்தி வைத்து இருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்