அதிமுக தலைவர்களின் படம் கிழிப்பு: ஓபிஎஸ் தரப்பு மீது இபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு
நாளை அதிமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பேரிகார்டுகளில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக தலைவர்களின் படங்கள் கிழக்கப்பட்டுள்ளது. இந்த செயல் கண்டனத்திற்குரியது என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார்.
நாளை அதிமுக பொதுக்குழு கூடவுள்ள நிலையில் பேரிகார்டுகளில் ஒட்டப்பட்டிருந்த அதிமுக தலைவர்களின் படங்கள் கிழக்கப்பட்டுள்ளது. இந்த செயல் கண்டனத்திற்குரியது என முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதன் முன்னாள் பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. அவ்வகையில் தற்போது கட்சிக்கு ஒற்றைத் தலைமை தான் வேண்டும் எனவும், அதுவும் நானாகத்தான் இருக்க வேண்டும் எனவும் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரும் பகடைகளை லாவகமாக உருட்டிக் கொண்டு உள்ளனர். இது தற்போது இது சூடுபிடித்துள்ளது. தமிழக அரசியலில் மட்டுமிலாமல் அதிமுகவினை மைய்யமாக வைத்து தமிழகத்தில் அரசியல் செய்யும் பாஜகவும் மறைமுக தொடர்பில் இருப்பதால், இந்திய அளவில் இந்த அரசியல் சூழ்ச்சிகள் கவனம் பெற்று வருகிறது.
உட்கட்சி பூசல், வழக்கு, மாவட்டச் செயலாளர்களை தன் வசம் இழுப்பது என, ஒரே அரசியல் பகடை ஆட்டம் வேகமெடுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில், சென்னை வனாகரத்தில் நாளை நடக்கவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுகவினரே கிழித்து உள்ளனர். இது அதிமுகவின் இரு தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பென்ஜமின் குற்றச்சாட்டு.
இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நாளை நடக்கவுள்ள கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு அமைதியான முறையில் நடக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் கட்சியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க நினைக்கும், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி என்பவர் பத்து பெண்களை அழைத்து வந்து இங்கு வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுகளில் ஒட்டப்பட்டிருந்த மற்றும் பேனர்களில் உள்ள அதிமுக தலைவர்களின் படத்தினை கிழித்துள்ளார். இது அராஜகத்தினை அரங்கேற்றம் செயவதற்கான முன்னோட்டமாக இதனை செய்துள்ளார். இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் காவல் துறையினரிடம் இது குறித்து புகார் அளிக்கவுள்ளோம். மேலும் நாளை கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு அமைதியான முறையில் நடைபெறும். அதற்கான வேலைகளை நாங்கள் செய்து வருகிறோம். ”நிச்சயமாக தர்மம் வெல்லும், அராஜகம் வாழ்ந்ததாக வரலாறு இல்லை” எனவும் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் கூறியுள்ளார்.
நாளை அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில் பேனர்களில் உள்ள தலைவர்களின் படங்கள் கிழிக்கப்பட்டிருக்கும் நிகழ்வு அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கவலையினையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்