அத்தனையும் உருட்டா சார்? - சட்டமன்ற நேரலை கட்; விஜய் அரசை வறுத்தெடுத்த அதிமுக ஐடி விங்க்
சட்டமன்ற நிகழ்வின் முழு நேரலை கட் செய்யப்பட்டதற்கு அத்தனையும் உருட்டா சார் என்று அதிமுக ஐடி விங்க விமர்சித்துள்ளது.

சட்டமன்ற நேரலை பாதியிலேயே துண்டிக்கப்பட்டதற்கு அதிமுக ஐடி விங்க் கடுமையாக விமர்சித்துள்ளது.
தமிழ்நாட்டின் 17ஆவது சட்டமன்றக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தலைமையில் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வு முழுவதும் நேரலை செய்யப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் கூறுகையில், இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்பு செய்யப்பட்ட சட்டமன்ற நேரலை மீண்டும் தொடங்கியிருப்பதாகவும் கொடுத்த வாக்கை முதல்வர் விஜய் காப்பாற்றி இருப்பதாகவும் இனி சட்டமன்ற நேரலை தொடரும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், சட்டமன்றத் கூட்டத்தொடர் தொடங்கியது. மேகதாது அணைக்கு எதிரான முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியது. அதுவரை நேரலை செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு நேரலை கட் செய்யப்பட்டது. சட்டமன்ற நிகழ்வுகள் நேரலையாக வழங்கப்படும் என தவெக அரசு உறுதி அளித்த நிலையில், இன்றைய விவாதத்தின் நேரலை பாதியில் துண்டிக்கப்பட்டு இருப்பது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது குறித்து வீடியோ ஆதரத்துடன் அதிமுக ஐடி விங்க் விமர்சித்து பதிவிட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பாதவது: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், பேரவையின் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
முழு நேரலை..
முழு நேரலை...
அத்தனையும் உருட்டா சார்!
ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.
நல்லா இருக்கு சார் உங்க மாற்றம்.
எந்த வாக்குறுதியும் நிறைவேத்துற மாதிரி ஐடியாவே இல்ல போல, அப்படித்தானே சார்!
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















