மேலும் அறிய

AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

AIADMK General Secretary Election: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (மார்ச் 19) மதியம் 3 மணிக்கு முடிவடைந்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (மார்ச் 19) மதியம் 3 மணிக்கு முடிவடைந்துள்ளது. 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்வுக்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இடைக்கால பொதுச்  செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளராக போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகவுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புக்குப் பின்னர் தான் பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளாதால், போட்டியின்றி எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார் என்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. 

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செலவம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில், தேர்தலை நடத்தலாம் என்றும் ஆனால் முடிவை அறிவிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசமி இருதரப்பினர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்கள் இதோ.,

ஓபிஎஸ் தரப்பு வாதம்:


AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

ஜெயலலிதாவே நிரந்தர பொதுச் செயலாளர் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த பதவியை வேறு யாரும் வகிக்க முடியாது. இடைக்கால பொதுச்செயலாளர் என யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. 

வெள்ளிக்கிழமை அட்டவணை வெளியிட்டு, ஞாயிறன்று  வேட்புமனுத்தாக்கல் நிறைவு என அவசரம் காட்டியுள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்கு சாதாரண உறுப்பினர்கள் போட்டியிட முடியாத நிலையை உருவாக்கி உள்ளனர்.

மேலும்,  இன்றுடன் வேட்புமனுதாக்கல் நிறைவு என, இன்று மாலையே பொதுச்செயலாளர் அறிவிக்கப்படலாம். மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியே வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்  என ஒபிஎஸ் தரப்பினர் வாதம் வைத்தனர்.

இபிஎஸ் தரப்பு வாதம்:


AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 3 பேரும் வழக்கு தொடர உரிமையில்லை எனவும், ஓ.பன்னீர்செல்வம் நேரடியாக வழக்கை தொடரவில்லை. 1.5 கோடி தொண்டர்களில் 1 சதவீதம் கூட ஓபிஎஸ்-க்கு ஆதரவு இல்லை.

பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. அ.தி.மு.க.வின் அஸ்திவாரத்தை உலுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செயல்படுவதாகவும், அதிமுகவின் எதிர்காலத்தை கருதியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படுகிறது.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கூறும் ஓபிஎஸ், தேர்தலை தடுக்க நினைப்பது ஏன்? கட்சிக்கு விதிராக நீதிமன்றங்கள் சென்றால் பதவி பறிக்கப்படும் என விதிகள் உள்ளன என உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது.

ஜெயலலிதாவை பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஏன் கொண்டு வரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பன்னீர்செல்வம்  தரப்பினர் தெரிவிக்கவில்லை. சூழ்நிலைகள் கருதி சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இபிஎஸ் தரப்பினர் வாதங்களை வைத்தனர்.

நீதிமன்றம் தரப்பு:


AIADMK: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; வேட்பு மனுதாக்கல் நிறைவு; போட்டியின்றி தேர்வாகும் எடப்பாடி பழனிச்சாமி..?

இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். அப்போது, பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவேண்டிய அவசியம் என்ன என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் என்றும், ஆனால் முடிவை அறிவிக்க வேண்டாம் எனவும் நீதிபதி தெரிவித்தார். 

மேலும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான வழக்கை ஏப்ரல் 11-க்கு பதிலாக முன்கூட்டியே மார்ச் 22-ம் தேதியை விசாரிக்க நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாகவும், அதன் தீர்ப்பை அதையடுத்து மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில், இத்தீர்ப்பை இரு தரப்பினரும் தங்களுக்கு சாதகமாக வந்துள்ளதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க! - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
11,773 குடும்பங்களின் வாழ்வாதாரம்: சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் அரசாணை வெளியாகுமா?
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
இங்காவது உணவு கிடைக்குமா? நீர் நிலைகள் வற்றுவதால் தஞ்சை பகுதி வயல்வெளிகளுக்கு படையெடுக்கும் பறவைகள்Will food be found here? Birds flock to the paddy fields of the Thanjavur region as water bodies dry up. (TNN
இங்காவது உணவு கிடைக்குமா? நீர் நிலைகள் வற்றுவதால் தஞ்சை பகுதி வயல்வெளிகளுக்கு படையெடுக்கும் பறவைகள்Will food be found here? Birds flock to the paddy fields of the Thanjavur region as water bodies dry up. (TNN

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Embed widget