மேலும் அறிய

AIADMK Case: முடக்கப்படுகிறதா இரட்டை இலைச் சின்னம்? இடையீட்டு மனுவிற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது. 

உச்சநீதிமன்றத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கோரும் எடப்பாடி பழனிசாமி மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என பழனிசாமியின் இடையீட்டு மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதில் மனு அளித்துள்ளது. 

அந்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார்” என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதமும் கேள்விக்குரியதாக உள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக வழக்கு இருந்தாலும், இரட்டை இலை சின்னம் குறித்து யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. 

இரட்டை இல்லை யாருக்கு:

இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார். தேர்தல் சின்னம் தொடர்பாக யாரும் எந்த பிரச்சனையையும் கொண்டு வரவில்லை. ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை. அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் நடத்தி தெரிவிக்க வேண்டும். 

தற்போது வரை அதிமுக இரட்டை தலைமைதான்:

ஜுலை 11 ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்காததால் தற்போது வரை அதிமுகவில் இரட்டை தலைமை நீடிக்கிறது. 

இரட்டை இலை சின்னம் முடங்குமா? 

இரட்டை இலை சின்னத்துக்கான படிவத்தில் அதிமுக தலைமை பதவியில் இருப்பவர்களே கையெழுத்திட முடியும். சின்னத்துக்கான படிவத்தில் கையெழுத்திட தயார் என ஓபிஎஸ் கூறினாலும், அதை ஏற்க எடப்பாடி பழனிசாமி தரப்பு தயாராக இல்லை. இருவரும் சேர்ந்து கையெழுத்திட்டால் மட்டுமே ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இல்லை சின்னம் ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய 2 பேரும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இருவருமே இரட்டை இலை சின்னத்தை கேட்பார்கள். இரு தரப்பும் கோரிக்கை விடுத்தால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் முடங்கவே அதிக வாய்ப்புள்ளது.  

ஈரோடு இடைத்தேர்தல் 27-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் நாளை இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில்,  "அங்கீகரிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை சேர்க்க கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்குழு விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இடையீட்டு மனு தாக்கல் செய்வதையும் ஏற்க முடியாது. ஈ.பி.எஸ்ஸின் இடையீட்டு மனு நீதிமன்ற நடைமுறையை தவறாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி அதிமுக பிரதிநிதி என்ற அடிப்படையில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை. அதனால், எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Vijayakanth: இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு மேலே பறந்த கருடன்; கண்ணீர் விட்ட தொண்டர்கள்!
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Anbumani: கூட்டணி என்றால் வாயை மூட வேண்டுமா ? திருமாவளவனுக்கு அன்புமணி சரமாரி கேள்வி..
Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?
Rule Change Jan 1st 2025: ஜிஎஸ்டி, மொபைல் டேட்டா, விசா..! இனி எல்லாமே புதுசு - ஜன.1, 2025 முதல் இத்தனை புதிய விதிகளா?
புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Anna University Issue: பாதிக்கப்பட்ட மாணவியையே குற்றம்சாட்டுவதா? காவல்நிலையம் வரவே பயப்படும் சாமானியர்கள்- நீதிபதிகள் சரமாரிக் கேள்விகள்
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Nitish Reddy: குலசாமியே! மானத்தைக் காப்பாற்றிய நிதிஷ் செஞ்சுரி! கதறிய கங்காரு பாய்ஸ்!
Embed widget