மேலும் அறிய

"துளியும் புரிதல் இல்லங்க" திருப்பூரில் அடுத்தடுத்து படுகொலை.. முதல்வரை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக திமுக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

திருப்பூரில் அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதாக திமுக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

"மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள திமுக"

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிடுகையில், "திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட ஈரம் காய்வதற்குள் அதே மாவட்டத்தில் அடுத்த கொலை நடந்திருப்பது, அதுவும் அதிக போக்குவரத்து நடமாட்டம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இப்படி ஒரு படுகொலை நடந்திருப்பது, இந்த விடியா திமுக ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது.

திருப்பூரில் அடுத்தடுத்து படுகொலைகள்:

முக்கியமான பிரச்சனையை சுட்டிக்காட்டுகிறேன் என்ற புரிதல் துளியும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ள ஸ்டாலின், திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

ரமேஷ் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைதுசெய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க கடுமையான நடவடிக்கைகளை இனியாவது மேற்கொள்ள விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டது, தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிக்க: Annamalai: "பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget