மேலும் அறிய

"என்னாது 18% ஜிஎஸ்டியா.. மத்திய அரசை கண்டிக்கிறேன்" கொதித்தெழுந்த இபிஎஸ்!

வணிக நிறுவனங்கள், வாடகைக்கு எடுக்கும் கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்துள்ளார். 

வணிக நிறுவனங்கள் வாடகைக்கு எடுக்கும் கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த வரி உயர்வு இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள் பாதிப்பு:

18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என சிறிய வணிக நிறுவனங்கள், கடை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். எனவே, இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், வணிகர்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு இன்னும் செவி சாய்க்கவில்லை. ஏற்கனவே,  சொத்துவரி, குப்பை வரி, பாதாள சாக்கடை வரி மற்றும் மின் கட்டண உயர்வால் வணிகர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று வணிக நிறுவனங்கள், மற்றும் கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வணிகர்களுக்காக களத்தில் குதித்துள்ள அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்துள்ளார். 

இபிஎஸ் கண்டனம்:

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "வாடகைக் கட்டடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றில் ஏற்பட்ட சரிவில் இருந்து வணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்ற இந்த வேளையில், வாடகை கட்டடங்களுக்கு ஜிஎஸ்டி வரி எனும் பெரும் சுமையை அவர்கள் தலையில் ஏற்றும் மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனம்.

 

வியாபாரிகளின் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் இந்த வாடகைக் கட்டடங்களுக்கான 18% ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசையும், உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசையும் வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget