விஜய் எழுதி கொடுத்ததை பேசுகிறார்.. அவருக்கு தெரியல - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
“சமுதாய மதநல்லிணகத்தை ஆம்பூரில் பார்க்கின்றேன். திமுக அரசு திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில், சர்ச்சைக்குரிய எண்ணெயை ஊற்றுகிறது” - நடிகை கஸ்தூரி

விஜயிற்கு எழுதி கொடுத்தவர்கள் மேலும் தகவலை சேர்த்து எழுதிகொடுத்திருக்க வேண்டும் என ஆம்பூரில் நடிகையும், பாஜக மாநில கலைக்குழு கலச்சார செயலாளர் கஸ்தூரி கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில், உள்ள தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் நடிகைகள் கஸ்தூரி மற்றும் கௌசல்யா ஆகியோர் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து, தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி பேசியதாவது:
நான் தற்பொழுது வந்த மருத்துவமனைக்கு, இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என அனைத்து மதத்தினரும் வந்தனர். சமூக நல்லிணக்கத்தை ஆம்பூரில் நான் கண்கூடாக கண்டேன். இந்து - முஸ்லிம் பிரிவை தமிழக அரசு பெரிது படுத்துகிறது. திருப்பரங்குன்றத்தில் ஒரு தீபம் ஏற்றுவதை இவ்வளவு பெரிய விஷயமாக எண்ணெய் ஊற்றி வளர்த்துள்ளது திமுக, தீபத்தை ஏற்றாமல் அதற்கான சர்ச்சை என்னும் எண்ணெயை ஊற்றி வருகிறது திமுக. ஒரு வகையில், திமுக அரசுக்கு நன்றியும், பாராட்டுளும், யாரும் யோசிக்காத ஒரு விஷயத்தை திருப்பரங்குன்றம் என்பது, முருக பக்தர்களுக்கு உகந்த முதலாம் படை வீடு தமிழ்நாட்டில் பிரசித்து பெற்றது. தற்போது, உலக அளவில் திருப்பரங்குன்றத்தை தெரியப்படுத்துள்ளனர்.
கனிமொழி வாயில் சர்க்கரை போடுவேன்
கனிமொழி அக்கா கூறுகிறார்கள் திருப்பரங்குன்றம் அயோத்தி ஆகிவிடும் என்று அப்படி என்றால், அவர்கள் வாயில் நான் சர்க்கரை போடுவேன். இந்து கோவில்களுக்கு இந்து பண்டிதர்களுக்கு இந்த அரசு, எதிர்வினையை ஆற்றுகிறது. திண்டுக்கல் அருகே அரசு இடத்தில், கோவில் நிர்வாகிகள் அன்னதானம் வழங்கக் கூடாது என அரசு தடுக்குகிறது. தேசவிரோத, இத்துவிரோத சக்தி, தமிழ்நாட்டில் இருக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் இஸ்லாமியர்கள் ஆதரவாக இருக்கும் நிலையில், இது பெரிய கலவரம் ஆகும் என்ற ஒரு பொய்யை மறுபடி, மறுபடி காவல்துறையும், தமிழக அரசும், சொல்கிறது. இதற்கு மேல் தீர்ப்பு அளித்த நீதி அரசரை எவ்விதமாக அவதூறு பேசுகிறார்கள். இன்னும் இருவர் அந்த தீர்ப்பை தெரிவித்தனர். ஆனால், சாமிநாதனை மட்டும் குறிவைத்து அவர்கள் மீது, தனிப்பட்ட முறையில் இந்த அரசு தாக்குகிறது. பாராளுமன்றத்தில் போய் பேசுகிறார்கள், ஒரு மனிதரை இவ்வளவு தூரம். ஏற்கனவே அவர் மீது பகுத்தறிவு கூட்டம், சேர்ந்து ஏற்கனவே பல புகார்களை சொல்லி இருக்கிறார்கள்
அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற திமுக அரசு இருப்பதற்கான மர்மம் என்ன, நேர்மையான ஒரு விலை போகாத, ஒருத்தர் வளைந்து கொடுக்காத, ஒருத்தர் நீதியை மட்டுமே நிலை நாட்டக்கூடிய ஒருத்தரை அவர் ஜாதி என்ன, மதம் என்ன் பின்னணி என்ன, விதவிதமாக அவதூறுகளை இந்த அரசு திமுக அரசு, கூட்டணி ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள், இதன் மர்மம் என்ன அதை அவர்கள் விளக்க வேண்டும்.

நீதிபதி சாமிநாதனுக்கு Z பாதுகாப்பு
மதுரையில் தேச விரோத, சக்திகள், சமூக வலைதளங்களில், வன்முறையை சார்ந்த கருத்துக்களை சாமிநாதனுக்கு, எதிராக பதிவுசெய்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே போனால் சாமிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உடனடியாக Z பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் குடும்பத்திற்கு மிகுந்த சீரிய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். மாநில அரசு கேட்பதை விட மத்திய அரசை கேட்பதற்கு காரணம் அச்சுறுதல் எங்கிருந்து வருது எனக்கு தெரியவில்லை. மத்திய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
எழுதி கொடுத்ததை பேசும் விஜய்
கரூர் சம்பவத்திற்கு பிறகு பல நாட்களாக எல்லாரும் உற்று நோக்கிய விஷயம் விஜய் புதுச்சேரியில் பேசியது. அவர் போகும் இடமெல்லாம் அதனுடைய சிறப்பை பேசுகிறார். அவருக்கு எழுதி கொடுத்ததை அவர் பேசுகிறார். அவர் விவரத்தை, தகவலை அறிந்து பேசவில்லை. எழுதி கொடுத்ததை பேசுகிறார், அவருக்கு எழுதிக் கொடுத்தவர்கள் இன்னும் கொஞ்சம் தயாரித்து, மேலும் விவரத்தை சேர்ந்து கொடுத்திருக்க வேண்டும். புதுச்சேரியில் எல்லாம் சிறப்பையும் கூறினார். பாண்டிச்சேரியைச் சேர்ந்த முதலமைச்சர் கனவில் இருக்கக்கூடிய புஸ்ஸி. ஆனந்த் பெயரை சொல்லவில்லை. அது ஏன் சொல்லவில்லை என்பது தெரியவில்லை. ஒரு வேலை அது பாண்டிச்சேரியின் சிறப்பு இல்லை என நிறுத்தி விட்டாரா?. விஜய் ரேஷன் கடை இல்லை என்று கூறி இருக்கிறார் அப்படி இல்லை, அங்கு பொருட்களுக்கு பதிலாக பணத்தை கொடுக்கிறார்கள். எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிட்டு விஜய் பேசி இருக்கிறார். எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முன்னரே திண்டுக்கல் இடைத்தேர்லில் வென்றார். ஆனால் தவெக விக்கிரவாண்டி, ஈரோடு ஆகிய இரண்டு இடைத்தேர்லில் தங்களது பலத்தை காட்டவில்லை,
வந்தே மாதரம் பாடல் வந்து 150 வருடம் ஆகிறது. அந்த குரல் ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும் தமிழகத்தின் மூலை எல்லாம், செல்ல வேண்டும், என்னுடைய ஆசை,என்னுடைய மகளுக்கு அந்த பாடலில் இருந்துதான் பெயரை எடுத்து வைத்தேன். நாட்டுப்பற்று பற்றி பேசும் பொழுது, காங்கிரஸ் பற்றி பேசக்கூடாது, வந்தே மாதரம் பாடலை, அவர்கள் தடுத்து நிறுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம். இந்தியாவில் அவர்கள் ஊறுவிளைக்கும் வேலையை செய்து வருகிறார்கள். இவ்வாறு கஸ்தூரி பேசினார்.





















