மேலும் அறிய

Vijay BMW Car Case: அவகாசம் கேட்ட தமிழக அரசு... விஜய் சொகுசு கார் வழக்கு ஒத்திவைப்பு!

விஜய்யின் BMW கார் வழக்கு பிப்ரவரி 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள உள்ளனர். இந்த நிலையில், இவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு வரிவிலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். 

அந்த வழக்கில் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் பற்றி தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தெரிவித்த எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனை அடுத்து, நடிகர் விஜய் தரப்பில் இருந்து புதிதாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதாவது, கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட BMW X5 காருக்கு நுழைவு வரி கட்டணம் செலுத்துவதில் தாமதம் செய்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்த BMW காருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, “எந்த அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு வணிகவரித்துறை தாக்கல் செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார். 

மேலும், இந்த வழக்கை பிப்ரவரி ஒன்றாம் தேதி ஒத்திவைத்து, அதுவரை நடிகர் விஜயின் பி.எம்.டபிள்யூ சொகுசுக் கார் வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்றும், அபராதத்தை வசூலிக்க எந்தவிதமான கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதை வணிக வரித்துறை உறுதி செய்யவேண்டும் என்றும் உத்தரவி குறிப்பிட்டிருந்தார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Union Budget 2022 LIVE:மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தனிநபர் வருமான வரி விகித மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி... வெற்றி நிலைமை என்ன?

Actor soori | ரயில் செட்டில் ராம்... ஆளே மாறிப்போன நிவின்.. அப்டேட் கொடுத்த சூரி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget