குஷ்புவின் மின்சார புகார்... டுவிட்டரில் குவியும் கருத்துக்கள்!
சென்னையில் நிலவி வரும் மின் குறைபாடு தொடர்பாக சுமந்த் சி ராமன் போட்டி பதிவை மேற்கோள் காட்டிய நடிகை குஷ்புவின் டுவிட்டருக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் கலந்த கலவை விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று நேற்றுடன் ஒரு மாதம் முடிந்தது. இந்த ஒரு மாதத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பிளஸ் 2 தேர்வு, தடுப்பூசி உள்ளிட்ட விஷயங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் செயல்பாட்டை பலரும் பாராட்டினர். அத்துடன் தமிழ்நாட்டில் நிலவி வந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டு ஆகியவற்றை சரி செய்ய தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் பலரும் பாராட்டும் வகையில் கருத்து தெரிவித்து வந்தனர். அத்துடன் அமைச்சர்களின் செயல்பாடுகளும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்று கருத்துகள் வந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் திமுக ஆட்சியில் மீண்டும் சில இடங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு ஒரு சில இடங்களில் உள்ளது என்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் என்னுடைய பகுதியில் மின் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதேபோன்று வேறு யாரும் மின்சார பிரச்னையை சந்திக்கிறீர்களா?"எனப் பதிவிட்டிருந்தார்.
Me. Everyday almost 12-15 times. Main problem is the speed of fluctuation . https://t.co/x9IYQZvlj1
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 7, 2021
இந்தப் பதிவு பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு மேற்கொள் காட்டி ஒரு ட்விட்டர் பதிவை செய்துள்ளார். அதில்,"ஆம் என்னுடைய பகுதியிலும் இதே பிரச்னை உள்ளது. குறிப்பாக 12-15 முறை வரை என்னுடைய பகுதியில் மின் குறைபாடு ஏற்படுகிறது" எனப் பதிவிட்டுள்ளார். குஷ்புவின் இந்தப் பதிவிற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் பதிவிட்டி வருகின்றனர். ஒரு சில இடங்களில் மின்சார பிரச்னை இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் கூறுவது அளவிற்கு எங்கும் இவ்வளவு பெரிய மின்சார குறைபாடு எதுவும் இல்லை என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சிலர் இது சென்னையைவிட கிராமபுறங்களில் அதிகமாக உள்ளது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவின் கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் மின்சாரம் தட்டுப்பாடு இருந்ததால், அதற்கு ஏற்ப தமிழ்நாட்டில் அப்போது மின்வெட்டு அமல்படுத்தப்பட்டிருந்தது. எனினும் அந்த நிலை தற்போது தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று சிலர் கருத்து தெரிவித்து வருவது அரசியல் காரணங்களுக்காக இருக்கலாம் என்றும் சிலர் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: PTR Vs H Raja : ”நான் யார் எனத் தெரிந்துகொண்டேன்” - ஹெச்.ராஜா விமர்சனத்தை ஹேண்டில் செய்த பி.டி.ஆர்