மேலும் அறிய

Rajinikanth: “மோடி மூன்றாவது முறையாக பிரதமரானது சாதனை” - பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட ரஜினிகாந்த்!

பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைக்கிறார். இன்று மாலை 7 மணியளவில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

நேருவுக்கு பின் 3 வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது சாதனை தான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டது. இந்த மக்களவை தேர்தலில் ஆளும் பாஜக கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 272 இடங்கள் இருந்தால் கூட்டணி தயவு இல்லாமல் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், அக்கட்சிக்கும் 240 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இதனிடையே ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதால் பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சியமைக்கிறார். 

இன்று மாலை 7 மணியளவில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். இதனையடுத்து அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். புதிய அமைச்சரவையில் யாருக்கெல்லாம் பதவி கொடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இதனை முன்னிட்டு டெல்லியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றம், 144 தடை உத்தரவு என மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல துறை சார்ந்த பிரபலங்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் திரைத்துறையில் பாஜக எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹேமமாலினி, கங்கனா ரனாவத், நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் நிச்சயம் வருகை தருவார்கள். அதேசமயம் நடிகர்கள் ரஜினிகாந்த்,பவன் கல்யாண்,  அனில் கபூர், அனுபம் கெர், போனி கபூர், ஜீதேந்திரா சிங், கரண் ஜோஹர் உள்ளிட்ட இந்திய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.

இதனிடையே சென்னையில் இருந்து டெல்லிக்கு ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மக்கள் ஒரு வலுவான எதிர்கட்சியை இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்வு செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான ஒன்று. அதேசமயம் நேருவுக்குப் பின் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பது சாதனை” என ரஜினிகாந்த் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி 2வது முறையாக பதவியேற்ற போது ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது, 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget