TN Weather Update: கொளுத்தியெடுக்கும் வெயில்.. இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்.. எச்சரிக்கும் வானிலை மையம்..
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![TN Weather Update: கொளுத்தியெடுக்கும் வெயில்.. இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்.. எச்சரிக்கும் வானிலை மையம்.. According to the Meteorological Department, the temperature will increase in Tamil Nadu today and tomorrow. TN Weather Update: கொளுத்தியெடுக்கும் வெயில்.. இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்.. எச்சரிக்கும் வானிலை மையம்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/18/62f96bd6341bb915760d17a4cb05b50f1681804770862589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18.04.2023 மற்றும் 19.04.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதன் காரணமாக,
20.04.2023: தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.
21.04.2023 மற்றும் 22.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
18.04.2023 மற்றும் 19.04.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு மற்றும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் 40.8 டிகிரி செல்சியஸ், சேலம் 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து வேலூர் – 39.8 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் – 39.8 டிகிரி செல்சியஸ், திருச்சி – 39.7 டிகிரி செல்சியஸ், நாமக்கல் – 39.5 டிகிரி செல்சியஸ், திருத்தணி – 39.5 டிகிரி செல்சியஸ், மதுரை – 39.8 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூர் – 38.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்ச 38.7 டிகிரி செல்சியஸாக இருக்கும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25.6 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 2.7 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம், புதுவையில் வெப்ப அலை அறிவிப்பதற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அளவை எட்டவில்லை. வெப்ப அலை நிகழ்வு பதிவாக வாய்ப்பு இருப்பின் அறிவிக்கப்படும் என இந்திய வானிலை தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)