TN Rain Alert: மதியம் 1 மணிவரை 7 மாவட்டங்களில் மழை இருக்கும்.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய மழை நிலவரம் இதோ..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த சில தினங்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.08.2023 முதல் 16.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)
நுங்கம்பாக்கம் (சென்னை) 14.9, மீனம்பாக்கம் (சென்னை) 35.8, குன்னூர் (நீலகிரி) 8.0, வேலூர் 1.0, கொடைக்கானல் (திண்டுக்கல்) 11.0, ஊட்டி (நீலகிரி) 39.0, ஏற்காடு (சேலம்) 12.0, விருதுநகர் 30.5, அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) 16.0, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 31.5, பல்லிக்கரணை (சென்னை) 32.0, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 24.0, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 31.5, எல்மோயிஸ் கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 1.0, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 20.5, சத்யபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 31.5, பூந்தமல்லி (திருவள்ளூர்) 52.0 மில்லிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை இருந்தாலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கரூரில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 36.8 டிகிரி செல்சியச் வெப்பநிலை பதிவானது. அடுத்த சில தினங்களுக்கு வெப்பநிலை பகல் நேரங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வெயில் வாட்டிய நிலையில், நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, எம்.ஆர்.சி நகர், ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்தது.