Lok Sabha Election 2024: 69.46 சதவீத வாக்குப்பதிவு.. தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் எத்தனை சதவீதம்?
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 69.46% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடே உற்று நோக்கிய மக்களவை தேர்தல் நேற்று முதல் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் 21 மாநிலத்திற்கு தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது. அந்த வகையில் அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு முழுவதும், 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.
நேற்று காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. கோடை காலம் என்பதால் காலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாக்களித்தனர். ஆனால் நண்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் வாக்குப்பதிவு சற்று மந்தமாக இருந்தது. பெரியவர்கள், முதல்முறை வாக்காளர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் வதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.
இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இறுதியாக தமிழ்நாடு முழுவதும் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என அறிவிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 72 சதவீதம் என கூறப்பட்ட நிலையில் நள்ளிரவில் வெளியான அறிவிப்பில் 69 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை வரும் அறிவிப்பில் இது மேலும் குறையக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண் | தொகுதி | வாக்கு சதவீதம் |
1. | திருவள்ளூர் | 68.31 |
2. | சென்னை (வ) | 60.13 |
3. | தென்சென்னை | 54.27 |
4. | ஸ்ரீபெரும்புதூர் | 60.21 |
5. | காஞ்சிபுரம் | 71.55 |
6. | அரக்கோணம் | 74.08 |
7. | மத்திய சென்னை | 53.91 |
8. | வேலூர் | 73.42 |
9. | கிருஷ்ணகிரி | 71.31 |
10. | தருமபுரி | 81.48 |
11. | தி.மலை | 73.88 |
12. | ஆரணி | 75.65 |
13. | விழுப்புரம் | 76.47 |
14. | கள்ளக்குறிச்சி | 79.25 |
15. | சேலம் | 78.13 |
16. | நாமக்கல் | 78.16 |
17. | ஈரோடு | 70.54 |
18. | திருப்பூர் | 70.58 |
19. | நீலகிரி | 70.93 |
20. | கோவை | 64.81 |
21. | பொள்ளாச்சி | 70.70 |
22. | திண்டுக்கல் | 70.99 |
23. | கரூர் | 78.61 |
24. | திருச்சி | 67.45 |
25. | பெரம்பலூர் | 77.37 |
26. | கடலூர் | 72.28 |
27. | சிதம்பரம் | 75.32 |
28. | மயிலாடுதுறை | 70.06 |
29. | நாகை | 71.55 |
30. | தஞ்சை | 68.18 |
31. | சிவகங்கை | 63.94 |
32. | மதுரை | 61.92 |
33. | தேனி | 69.87 |
34. | விருதுநகர் | 70.17 |
35. | ராமநாதபுரம் | 68.18 |
36. | தூத்துக்குடி | 59.96 |
37. | தென்காசி | 67.55 |
38. | நெல்லை | 64.10 |
39. | கன்னியாகுமரி | 65.46 |
40. | பாண்டிச்சேரி | 79.81 |
தமிழ்நாடு | 69.46 |